காவல் நிலையத்திற்குச் சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
காவல் நிலையத்திற்குச் சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சென்னை கொடுங்கையூரில் திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அப்பு என்ற ராஜசேகர் என்பவர் காவல் நிலையத்தில் மரணமடைந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் கொடுங்கையூர் காவல் ஆய்வாளர், தலைமை காலவர், உதவி ஆய்வாளர் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்... வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!!
சமீபத்தில் தலைமைச் செயலக காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கைதி விக்னேஷ் என்பவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழகத்தில் அரசு இயங்குகிறதா என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,” இரண்டு நாட்களில், இரண்டு லாக்கப் மரணங்கள். நேற்று ராஜசேகர், இன்று சிவசுப்பிரமணியன். காவல் நிலையத்திற்குச் சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை.
கடந்த ஓராண்டில் ஏழு லாக்கப் மரணங்கள். காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் நிலை என்ன? தமிழகத்தில் அரசு இயங்குகிறதா???" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: விசாரணை கைதி மரணம் .. நள்ளிரவு வரை நடந்த விசாரணை.. காவல் ஆய்வாளர் உட்பட 5 பேர் இடைநீக்கம்
