அண்ணாமலைக்கு என்ன ஆச்சு.. திடீரென கட்சி நிகழ்ச்சிகள் ரத்து.. அதிர்ச்சியில் தொண்டர்கள்..!
கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அண்ணாமலை பெங்களூரு சென்றார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்க இருந்த அனைத்து கட்சி நிகழ்ச்சிகளும் 2 நாட்களுக்கு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அண்ணாமலை பெங்களூரு சென்றார். அங்கு தேர்தல் முன்னேற்பாடுகளுக்கான பணிகளில் ஓய்வின்றி தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனால், அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து மருத்துவர்கள் அறிவுரையின் படி பெங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓய்வெடுத்து வருகிறார்.
இதையும் படிங்க;- வெற்று மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம்... ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை பதிலடி!!
இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அண்ணாமலை பங்கேற்பதாக இருந்த நிலையில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது. அவருக்கு எந்த வகையான காய்ச்சல் என்ற விவரம் வெளியாகவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் பெங்களூவில் இருந்து சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க;- பாஜக தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசி எச்சரித்த கடம்பூர் ராஜூ