பாஜக தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசி எச்சரித்த கடம்பூர் ராஜூ

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மைக்கை கண்டால் எதை வேண்டுமானாலும் பேசி விடுவார் போல. அவருக்கு அது ஒரு வியாதி என  சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு.

aiadmk mla kadambur raju warns bjp state president annamalai

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா  பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவ்போது அவர் பேசுகையில்:- சட்ட மன்றத்தில் அம்மாவின் சிங்கப் பார்வைக்கு அனைவரும் அமைதியாக இருந்த காலம் எல்லாம் உண்டு. கேவலம் அண்ணாமலை அரசியலுக்கு ஒரு கத்துக்குட்டி.

உங்கள் வீட்டு அம்மாவை புகழ்ந்து பேசினால் தான் வீட்டில் சோறு கிடைக்கும் என்றால் புகழ்ந்து பேசுங்கள். அதற்கு நாங்கள் இடையூறாக இல்லை. ஆனால் புரட்சித்தலைவி அம்மாவை ஒப்பிட்டுப் பேசக்கூடாது. அம்மாவுக்கு நிகர் அம்மா தான். தமிழனுடைய உரிமையை, பெருமையை டெல்லியில் நிலைநாட்டிய பெருமை புரட்சித் தலைவி அம்மாவையே சாரும்.

அதிமுகவில் இருந்து விலகி பாஜகவிற்கு சென்று எம் எல் ஏ வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் நயினார் நாகேந்திரன். அதற்காக நாங்கள் என்ன அவரிடம் சண்டையா போட்டோம்? பாஜகவினரிடம் நாம் என்ன பஞ்சாயத்தா வைத்தோம்? ஒற்றை தலைமை என்று அன்றைக்கே இந்த நிலைமை வந்திருந்தால் நயினார் நாகேந்திரன் பாஜகவிற்கு சென்றிருக்க மாட்டார்.

ஐபிஎஸ் முடித்துவிட்டு பதவி மாற்றத்திற்காக அரசியலுக்கு வந்தவர் அண்ணாமலை. மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தால் திரும்பவும் ஐபிஎஸ் வேலைக்கு தான் செல்ல வேண்டும். தேர்தல் நேரத்தில் அதிமுகவில் வேட்பாளர் என்ற அறிவிப்பே வேட்பாளருக்கு பெருமை. வெற்றி, தோல்வி என்பது அரசியலில் சகஜம்.

கடைக்கு சென்ற சிறுவன் மதுபாட்டிலால் குத்தி கொலை; போதை ஆசாமிகள் வெறிச்செயல்

அரசியல்வாதி பேச்சை அளந்து பேச வேண்டும் மைக்கை கண்டால் எதை வேண்டுமானாலும் பேசி விடுவார் போல. அண்ணாமலைக்கு அது ஒரு வியாதி. தொலைக்காட்சிகளில் அண்ணாமலையின் பேச்சை கேட்டால் சேனலை மாற்றக்கூடிய அளவிற்கு மக்கள் வந்து விட்டார்கள். புரட்சித்தலைவி ஜெயலலிதாவை பற்றி பேசியவர்களுக்கு அழிவு தான் ஆரம்பம் அதிமுகவை உரசி  பார்த்தால் தீ குழம்பாக எரியும் என்று எச்சரிக்கிறேன் என்றார்.

இளம் பெண்ணுக்கு கடன் கொடுத்து உதவுவது போல் பாலியல் தொல்லை: விஏஓ கைது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios