Asianet News TamilAsianet News Tamil

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு..!

கர்நாடகாவை கண்டித்து நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற உண்ணாவிரதத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாட்டு வண்டியில் வந்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Tamil Nadu BJP leader files case against Annamalai ..!
Author
Tamil Nadu, First Published Aug 6, 2021, 12:08 PM IST

கர்நாடகாவை கண்டித்து நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற உண்ணாவிரதத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாட்டு வண்டியில் வந்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 Tamil Nadu BJP leader files case against Annamalai ..!

மேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் தஞ்சையில் அண்ணாமலை உண்ணாவிரதம் மேற்கொண்டார். தஞ்சையில் போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, துணை தலைவர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்ற்றுள்ளனர். மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என்று அறிவித்துள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை கண்டித்து  இன்று தஞ்சையில்  உண்ணாவிரதம் நடைபெற்றது. Tamil Nadu BJP leader files case against Annamalai ..! 

 நான் தஞ்சையில் உண்ணாவிரதம் இருப்பது கர்நாடக அரசு, கர்நாடக முதல்வரை எதிர்த்து அல்ல. அங்குள்ள காங்., தலைவர் சித்தராமையா, சிவகுமார் போன்றோரும், 'மேகதாது அணை கட்டுவதை தமிழகத்துக்கு ஏன் கடிதம் எழுதி தெரிவிக்க வேண்டும்' என கேட்பதை எதிர்த்து தான் போராட உள்ளேன்.

அம்மாநிலத்தில் விவசாயிகளை காக்க, அங்குள்ள பா.ஜ., முயல்கிறது. தமிழக விவசாயிகளுக்காக நாங்கள் போராடுகிறோம். காவிரி ஆணையம் அனுமதி பெறாமல், அணையை கட்ட முடியாது என்பதை உணர வேண்டும். இதை அரசியலாக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார் அண்ணாமலை. இந்நிலையில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் சென்றது, கொரோனா விதிகளை மீறி கூடியது உள்ளிட்ட புகாரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


 

Follow Us:
Download App:
  • android
  • ios