தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் ஜூலை 30-ம் தேதி வரை நடைபெறும் நிலையில் ஜூலை 1-ம் தேதி சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற உள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 28-ம் தேதி தொடங்கி ஜூலை 30-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும். மொத்தம் 23 நாட்களுக்கு கூட்டம் நடத்தப்படும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின்னர் சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் வரும் ஜூன் 28-ம் தேதியன்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும். அன்றைய தினம் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். 29,30 அரசு விடுமுறை. பின்னர் அஜண்டா வழங்கப்படும். ஜூலை 1-ம் தேதி மானியக் கோரிக்கைகள் எடுத்து கொள்ளப்படும். மேலும், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும். 

பின்னர், ஜூலை 1-ம் தேதி சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, 2-ம் தேதி பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை, 3/ம் தேதி கூட்டுறவு, 4-ம் தேதி எரிசக்தி மற்றும் மதுவிலக்கு, 5-ம் தேதி மீன்வளம் மற்றும் பால்வளம், 8-ம் தேதி நகராட்சி நிர்வாகம், 9-ம் தேதி நீதி நிர்வாகம், 10-ம் தேதி சமூக நலம் மற்றும் சத்துணவு மானியக்கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெறும். 

அதேபோல, ஜூலை 11-ம் தொழில்துறை மீதான மானியக் கோரிக்கையும், 12-ம், கைத்தறி மற்றும் துணிநுால், செய்தி மற்றும் விளம்பரத்துறை விவாதமும், 15-ம் தேதி நெடுஞ்சாலைத்துறை, 16-ம் மக்கள் நல்வாழ்வு 17-ம், வேளாண்துறை, 18-ம் சுற்றுலா மற்றும் இந்துசமய அறநிலையத்துறையும், 19-ம் தேதி வருவாய்துறையும், 22 மற்றும் 23-ம் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கைகளும் எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்படும். சட்டப்பேரவை நாட்களில் அனைத்து வேலை நாட்களுமே கேள்வி நேரம் இருக்கும். மொத்தம் கூட்டத்தொடர் 23 நாட்கள் நடைபெறுகிறது என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.