tamil nadu assembly election wil be held within decmber...t.t.v.dinakaran
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் அதிமுக அம்மா அணி போட்டியிடும் என்றும், ஆனால் அதற்குள் தமிழக சட்டப் பேரவைக்கு தேர்தல் வந்துவிடும் என்றும் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக அம்மா அணி கண்டிப்பாக போட்டியிடும் என தெரிவித்தார்.
ஆனால் அந்த இடைத் தேர்தல் நடைபெறுமுன் தமிழக சட்டப் பேரவைக்கு பொதுத் தேர்தலே வந்துவிடும் என்று உறுதியாக தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னம் தங்களது சொத்து என்றும், அதை மீட்டே தீருவோம் என கூறிய டி.டி.வி.தினகரன், தற்போது நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை விரைவில் அகற்றுவோம் என்றும் தெரிவித்தார்.
டெங்குவை ஒழிக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தமிழகத்தின் வளர்ச்சிக்கான சிந்தனை என்பதே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு இல்லை என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
