சென்னை உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி தஹில் ரமாணி அவர்களின் பணியிடப் மாற்றத்தை கண்டித்து நாளை ஒரு நாள் நீதிமன்றத்தை புறக்கணிக்கப்போவதாக சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம்  சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் தஹில் ரமாணி. நாட்டில் தலைமை நீதிபதியாக இதுவரை நியமிக்கப்பட்டுள்ள இரண்டு பெண் நீதிபதிகளில் தஹில் ரமாணியும் ஒருவர் ஆவார். இந்நிலையில் ரமாணியை மேகாலயா மாநில நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்து  ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதி மன்ற கொலிஜியம்  குழு உத்தரவிட்டது. சில நிர்வாக காரணங்களுக்காக  ரமாணியை இடமாற்றம் செய்யவதாகவும்  கொலிஜியம் தெரிவித்துள்ளது. 

 இந்நிலையில் மேகாலயா நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதை ஏற்க முடியாது எனகூறி நீதிபதி தஹில் ரமாணி எதிரிப்பு தெரிவித்துள்ளார்.  பாரம்பரியமிக்க சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து தம்மை மேகாலயா போன்ற சிறிய நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யவதை ஏற்ற முடியாது எனவே தன் நீதிபதி பதிவியை ராஜினாமா செய்கிறேன் என கூறி  இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு தஹில் ரமாணி  தன்னுடைய ரஜினமா கடிதத்தையும் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.  இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க  தலைவராக இருந்த மோகனகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார், 

அதில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி தஹில் ரமாணி அவர்களை முறையான காரணங்கள் இன்றி பணியிட மாற்றம் செய்வதை ஏற்க முடியாது என்றார். உடனே அவரது இடமாற்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி 

நாளை ஒரு நாள் தமிழகம் முழுவதும் அனைத்து வழக்கறிஞர்களும்  நீதிமன்றங்களை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவர்  என்று அவர் தெரிவித்துள்ளார். சிறிய நீதிமன்றமான மேகாலாய உயர்நீதிமன்றத்திற்கு அவரை பணிமாற்றம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது  என்றும் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் மோகனகிருஷ்ணன் அப்போது தெரிவித்தார்.