புதுமுகத்துக்கு சீட்டை விட்டுக்கொடுத்த ஜி.கே.வாசன்..! என்.ஆர்.நடராஜன் தஞ்சை தமாகா வேட்பாளர்..!

மக்களவை தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் தமாகா கட்சி வேட்பாளராக என்.ஆர்.நடராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். 

tamil maanila congress candidate announce

மக்களவை தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் தமாகா கட்சி வேட்பாளராக என்.ஆர்.நடராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். 

வரும் ஏப்ரல் 18-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடைபெற உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, தமாகா உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணி இடம் பெற்றுள்ள தமாகாவுக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. tamil maanila congress candidate announce

இந்நிலையில் பல்வேறு இழுபறிக்கு இடையே அதிமுக போட்டியிடும் 20 தொகுதிக்கும் நேற்று வேட்பாளர் பட்டியலை வெளியிடப்பட்டது. இதனையடுத்து பாமக, தேமுதிக கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதனையடுத்து தஞ்சை தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளராக என்.ஆர்.நடராஜன் நடராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிட உள்ளது. tamil maanila congress candidate announce

தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பாக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், அமமுக சார்பில் பிரிஸ்ட் கல்வி குழுமத்தின் நிறுவனர்  பொன்.முருகேசன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios