இரண்டு ரூபாய் வாங்கிக்கொண்டு என்னை பற்றிய வதந்தி ட்வீட் போட்டது காங்கிரஸ் கட்சியினர் தான் என்று பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை பேட்டியளித்த குஷ்பு;- நான் இன்னமும் பெரியாரிஸ்ட் தான், பெண்களுக்காக குரல் கொடுத்தார் பெரியார். பெண்களுக்காக தொடர்ந்து நானும் குரல் கொடுப்பேன் என்றார். நான் அரசியலுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. என் கணவருடன் எந்த நிகழ்ச்சியிலாவது பார்த்துள்ளீர்களா? அவர்கள் மேல் உள்ள கணத்தை மறைக்க என் கணவர் மீது பழி போடுகிறார்கள். எனது அரசியல் முடிவுகளுக்கு சுந்தர்.சி காரணம் என கூறக்கூடாது. இப்படி பேசுதெல்லாம் கேவலமான புத்தி. 

ஒரு பெண் புத்திசாலியாக இருக்கக்கூடாது. ஒரு பெண் திறமையால் முன்னேற பெண் முட்டாளாகவே நடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி நினைக்கிறது.நான் நடிகை, படத்தில் வெளிப்படையாக நடிக்கிறேன்; நீங்கள் தலைவர் என்று வேசமிட்டு நிஜத்தில் நடிக்கிறீர்கள் என கே.எஸ்.அழகிரியை மிக கடுமையாக விமர்சித்தார். 

மேலும், காங்கிரசில் இருந்தபோது மனசாட்சியின்றிதான் பாஜகவை விமர்சித்தேன். மக்களுக்கு நல்லது செய்யவே பாஜகவில் சேர்ந்துள்ளேன். இரண்டு ரூபாய் வாங்கிக்கொண்டு என்னை பற்றிய வதந்தி ட்வீட் போட்டது காங்கிரஸ் கட்சியினர் தான். பதவிக்காகவோ, பேரம் பேசியோ சேரவில்லை. 2021ல் தமிழகத்தில் தாமரையை நிச்சயமாக மலர வைப்போம் என்று கூறியுள்ளார்.