அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்புலன்ஸ்களை முறைப்படுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்புலன்ஸ்களை முறைப்படுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் ஆம்புலன்ஸ்களில் 3 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் ஏழை மக்களின் சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொண்டுள்ளார்.