விவசாயிகள் பெயரில் பெரு முதலாளிகள் வங்கிகளில் நகைக் கடன்களை வாங்குவதைத் தடுக்கவே, நகைக் கடன் வழங்குவதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

விவசாயிகள் பெயரில் பெரு முதலாளிகள் வங்கிகளில் நகைக் கடன்களை வாங்குவதைத் தடுக்கவே, நகைக் கடன் வழங்குவதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

புதுக்கோட்டை அருகே திருமயத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், ’’ப.சிதம்பரத்தை போன்று தமிழகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார். தமது இலவச இணைப்பில் உள்ள ஒரு கட்சியை கழற்றி விடுவது தி.மு.க.,வுக்கு நல்லது.

நீர் மேலாண்மைக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பது தவறல்ல. விவசாயிகள் என்ற பெயரில் பெரிய முதலாளிகள் விவசாய நகை கடன்களை வாங்குகின்றனர். உண்மையான விவசாயிகளுக்கு நகைக் கடன்களை வழங்க வேண்டும் என்பதற்காகவே, நகை கடன் வழங்குவதில் மத்திய அரசு புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளது’’ என அவர் கூறினார்.