Asianet News TamilAsianet News Tamil

தப்லிஹி ஜமாத்தின் மற்றொரு முகம்... நோட்டீஸ் அனுப்பியவர்களை நோக வைத்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி..!

நிஜாமுதீனில் உள்ள  தப்லிகி ஜமாஅத்  என்ற பெயரை கொரோனா வைரஸ் விளம்பரமாக்கிய பின்னரே இந்தியர்கள் கேள்வி பட்டிருப்பார்கள்.

Tablighi Jamaat - its other, evil side Auditor Gurumurthy retaliates for those who send notice
Author
Delhi, First Published Apr 11, 2020, 5:56 PM IST

தப்லிகி ஜமாஅத் - இது மற்றொரு பேய் முகம் என்கிற தலைப்பில்  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில செய்தி நிறுவனத்தில் அதன் மற்றொரு, தீய பக்கங்களை தோலுரித்து காட்டி தலையங்கம் எழுதியிருந்தார் துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி. ஏப்ரல் 2ம் தேதி வெளியான அந்தத் தலையங்கத்தில், ’’உளவுத்துறை அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கையாக இருந்தார்களே தவிர, நிஜாமுதீனில் உள்ள  தப்லிகி ஜமாஅத்  என்ற பெயரை கொரோனா வைரஸ் விளம்பரமாக்கிய பின்னரே இந்தியர்கள் கேள்வி பட்டிருப்பார்கள்.Tablighi Jamaat - its other, evil side Auditor Gurumurthy retaliates for those who send notice

தப்லிஹி ஜமாத் ஆறு கொள்கைகளை இஸ்லாமிய பக்தியாக தீவிரமாக பரிந்துரைக்கின்றன. ஆனால், அது அப்பாவி மற்றும் இலட்சியவாத இளம் முஸ்லிம்களை ஒரு கருத்தியல் வரியாக அழைக்கிறது. இறுதியில் அவர்களை பயங்கரவாதிகளாக மாற்றுகிறது. நூற்றாண்டு பழமையான தப்லிஹி ஜமாத்தின் ஆபத்தான முகம்  2001 முதல் உலகம் முழுவதும் வெளிவரத் தொடங்கியது. ஆனால் இந்தியாவில் இல்லை’’ எனத் தொடங்கி அந்தத் தலையங்கத்தில் தப்லிஹி ஜமாத் மூலம் நடைபெற்ற கொடூர சம்பவங்களை அடுக்கியுள்ள துக்ளக் குருமூர்த்தி இறுதியாக இந்தியாவில் கொரோனாவை பரப்பிய விவகாரத்தை  விவரித்துள்ளார்.

Tablighi Jamaat - its other, evil side Auditor Gurumurthy retaliates for those who send notice

அதில், தப்லிஹி ஜமாத்தின் உலகளாவிய தலைமையகம் எங்கே? நிஜாமுதீன் மேற்கு டெல்லி! மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, சீனா மற்றும் பிற கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்களில் இருந்து நூற்றுக்கணக்கான தப்லிகிகள் பங்கேற்ற அதன் வருடாந்திர சந்திப்பு இடம். கொரோனா கடுமையான மற்றும் ஆபத்தான தேசிய அச்சுறுத்தலாக வெடிக்கும் வரை இந்தியாவில் வியக்கத்தக்க வகையில் கட்டுப்பாட்டில் இருந்தது. 

செம்மறி தோலில் ஓநாய் போல  வரம்பை மீறி, அச்சுறுத்தல் இருந்த நிலையிலும் அப்பாவி முஸ்லிம்களை அழைத்து மாநாடு நடத்தி  ஆபத்தான குண்டுகளை வீசுபவர்களாக மாற்றி விட்டார்கள். இந்தியாவில் பயங்கரவாதத்தை வழிநடத்தும் தப்லிஹி உரிமையும் சிறுபான்மை உரிமையா? என்பதை நீதிமன்றங்கள் தீர்மானிக்கட்டும்’’ என அந்த கட்டுரையில் எழுதியிருந்தார் துக்ளக் குருமூர்த்தி.

Tablighi Jamaat - its other, evil side Auditor Gurumurthy retaliates for those who send notice

இதற்கு மறுப்புத் தெரிவித்து தங்களது அமைப்பை அவதூறாக சித்தரிப்பதாகவும், பகிரங்க மன்னிப்பு கேட்டு மறுப்புக் கட்டுரை வெளியிடக்கோரியும், நஷ்ட ஈடாக ரூ.1 கோடி தர வேண்டும் எனக் கோரியும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திற்கும், துக்ளக் குருமூர்த்திக்கும்  வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தது தப்லிஹி ஜமாத்.. அதற்கு பதிலடி கொடுத்துள்ள குருமூர்த்தி வழக்கறிஞர் தரப்பு, தப்லிஹி ஜமாத் அமைப்பின் பெயரை சொல்லி ஷேக் மெஹபூப் அப்பாஸ் மற்றும் சிலர் வன்முறையில் ஈடுபடுவதாக மட்டுமே கூறியிருந்தார்.

Tablighi Jamaat - its other, evil side Auditor Gurumurthy retaliates for those who send notice

 ஃப்ரெட் பர்டான் மற்றும் ஸ்காட் ஸ்டீவெர்ட் எழுதியுள்ள கட்டுரையில், தப்லிஹி ஜமாத் மறைமுகமாக நடத்தும் தீவிரவாதம் என்கிற நூலில், தப்லிஹி ஜமாத் கடந்த 2008ல்  லண்டன் ரயிலில் நடத்திய குண்டு வெடிப்பில் 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனக்கூறியுள்ளது. அந்த தகவல் உட்பட பல நிகழ்வுகளை கோடிட்டு காட்டியே அந்த தலையங்கம் வெளியாகி உள்ளது என்பன உட்பட பல்வேறு ஆதாரங்களுடன் அந்த தலையங்கத்தில் எழுதப்பட்ட தகவல்களுக்கு மூல ஆதாரங்களை சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்துள்ளார் துக்ளக் குருமூர்த்தி. 

Follow Us:
Download App:
  • android
  • ios