ஒரு அரசியல் கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து இப்படி நடந்து கொள்வது ஏற்புடையதல்ல என பியூஷ் மானுஷுக்கு அறிவுரை கூறியுள்ளார் அமமுக பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன்.

 

சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் நேற்று சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்குள் சென்று ஃபேஸ்புக்கில் லைவ் அடித்து காஷ்மீர், பொருளாதார மந்தநிலை குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர் தாக்கப்பட்டார். இந்த நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டி.டி.வி.தினகரன், ’’சேலத்தில் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் பாரதிய ஜனதா கட்சியினரால் தாக்கப்பட்டது கண்டனத்திற்குரியது. காவல்துறையினரின் கண்ணெதிரிலேயே இச்சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தாக்கியதற்குப் பதிலாக காவல்துறையினரை வைத்து அவரை வெளியேற்றி இருக்கலாம்.

அதே நேரத்தில், ஜனநாயக முறையில் எதிர்ப்பைத் தெரிவிக்க எத்தனையோ வழிகள் இருக்கும் போது ஓர் அரசியல் கட்சியின் அலுவலகத்திற்குள் நுழைந்து இப்படி நடந்து கொள்வது ஏற்புடையதல்ல. இந்நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.