லட்சிய திமுகவின் தலைவர் டி.ராஜேந்தர் இன்று தி.நகரில் உள்ள அவருடைய வீட்டில், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது என்றும் இல்லாதது போல் இன்று செய்தியாளர்களின் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சமாளித்தார் டி.ராஜேந்தர். 

மேலும் நேஷ்னல் லெவல் அரசியலில் கலக்க விரைவில் ஹிந்தியில் படம் எடுக்க உள்ளதாக தன்னுடைய மாஸ்டர் பிளான் குறித்தும் தெரிவித்தார்.

வரும் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி, லட்சிய திமுகவின் பொதுகுழு கூட்டத்தை கூட்ட உள்ளதாக தெரிவித்தார். அப்போது செய்தியாளர்கள் திடீர் என இது எத்தனையாவது பொதுகுழு என கேட்க ஒரு நிமிடம் என்ன சொல்வது என தெரியாமல் திகைத்து நின்றார். 

பின்னர் தேசிய அளவில் தான் அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். இதற்கான முதல் நடவடிக்கையாக ஹிந்தியில் படம் எடுக்க உள்ளதாகவும், அதற்காக இரண்டு கதைகளை தேர்வு செய்து வைத்துள்ளதாகவும் கூறி, நேஷ்னல் லெவல் அரசியலில் நுழைய தன்னுடைய மாஸ்டர் பிளானையும் கூறினார். 

இந்த படத்தில் ஒருவேளை கதாநாயகனாக சிம்பு நடிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இது வெறும் யுகம் தான். தற்போது தமிழில் கலக்கி வரும் சிம்பு, டி.ஆர். எடுக்கும் இந்தி படத்தில் நடித்தால், பாலிவுட் திரையுலகிலும் பிரபலம் ஆகலாம்  என எதிர்ப்பார்க்கலாம். இது குறித்து அதிகார பூர்வ தகவல் வரும் வரை காத்திருப்போம்.

இந்த தகவல் சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் இருந்தாலும், நேஷ்னல் லெவலில் படமெடுப்பதே அரசியலில் அங்கு வலுப்பெற தான் என்பது போல் இவர் தெரிவித்துள்ளது, மற்ற அரசியல் காட்சிகளை பயமுறுத்துவது போல் உள்ளது என சிலர் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகிறார்கள்.