என்னை அகதி எனக்கூறிய விளையாட அனுமதி மறுக்கப்படுகிறது  என நீச்சல் வீராங்கனை தனுஜா கண் கலங்க கூறியுள்ளார். முதலமைச்சர்கள் கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்கு தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் உதவ வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

என்னை அகதி எனக்கூறிய விளையாட அனுமதி மறுக்கப்படுகிறது என நீச்சல் வீராங்கனை தனுஜா கண் கலங்க கூறியுள்ளார். முதலமைச்சர்கள் கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்கு தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் உதவ வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் இனப் பிரச்சனையால் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் ஈழத் தமிழரான ஜெயகுமார்- அருள்ஜோதி தம்பதியர் மகள் 15 வயது நிரம்பிய தனுஜா. தனது 5 வயது முதல் நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வரும் இவர் பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.

தமிழக அளவில் பலமுறை முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான பதக்கங்களை அவர் வென்றுள்ளார். இந்திய அளவிலும் இரண்டாவது மூன்றாவது இடங்களை தொடர்ந்து அவர் கைப்பற்றியுள்ளார். பொருளாதார நெருக்கடி ஏழ்மை தனக்குப் பெரும் தடையாக இருந்தாலும் அது அனைத்தையும் தாண்டி பல் போட்டுகளில் வெற்றி வாகை சூடியுள்ளார் தனுஜா. ஆனால் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளிலும், அமெரிக்காவில் நடைபெறவிருந்த விளையாட்டு போட்டிகளிலும் தனுஜாவுக்கு விளையாட அனுமதி மறுக்கப்பட்டது. அவர் அகதி என்பதாலும், அயல்நாட்டவர் என்பதாலும் அவர் தமிழ்நாட்டின் சார்பிலும், இந்தியாவின் சார்பிலும் விளையாட முடியாது என அனுமதிகள் மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர். இந்த வருடம் 2022 முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் தன்னை அனுமதிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு தாழ்மையான வேண்டுகோள் வைக்கிறேன், போட்டிகளில் பங்கேற்க அனுமதித்தால் இந்திய அளவில் நடைபெறும் போட்டிகளிலும், உலக அளவில் நடைபெற இருக்கும் போட்டிகளிலும் நான் வெற்றி பெற்று இந்தியாவிற்கும் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் பெருமை சேர்ப்பேன். என்னை அகதி என்று கூறி விளையாட அனுமதி மறுக்கின்றனர். எனக்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் தான் உதவ வேண்டும். முதல்வரை தான் நான் நம்பி இருக்கிறேன் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.