Asianet News TamilAsianet News Tamil

திமிர்த்தனமாக பதில் சொல்லும் சூர்யா.. திருமாவளவன் பின்னால் ஒளியாதே.. நீதியின் குரல் பாஸ்கரன்.

அன்புமணி ராமதாஸ் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு திமிர்த்தனமாக பதில் சொல்லும் நீ (சூர்யா) முதல்வர்  ஸ்டாலின் அவர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பின்னால் ஒளிவது ஏன், இப்படி மாற்று வேலைகளை செய்யும் நீங்கள் நேரடியாக அரசியலுக்கு வாருங்கள், வெளிப்படையாக இதுதான் என் கருத்து, கொள்கை என்று சொல். 

Surya responds arrogantly .. Do not shine behind Thirumavalavan .. Neethiyin kural baskaran Baskaran criticized.
Author
Chennai, First Published Nov 18, 2021, 5:21 PM IST

மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விகளுக்கு  திமிர்த்தனமாக பதில் சொல்லும் நடிகர் சூர்யா முதல்வர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பின்னால்  ஒளிவது ஏன் என்றும், செய்த தவறை திருத்திக் கொள்ளுங்கள் என்று கூறினால் திருமாவளவனின் துணைக்கு அழைத்து வருவதா என்றும், இப்படி மாற்று வேலைகளை செய்கிற சூர்யா நேரடியாக அரசியல் களத்திற்கு வரலாமே என்றும் பாமகவை சேர்ந்த நீதியின் குரல் பாஸ்கரன் விமர்சித்துள்ளார். 

ஜெய் பீம் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தி விட்டதாகவும் அதற்க்காக சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி பாமகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சூர்யாவை எட்டி உதைப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு கொடுக்க தயார் என பாமக மாவட்ட செயலாளர் அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்பதுடன் 5 கோடி ரூபாய் மாநநஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் பாமக தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வடமாவட்டங்களில் சூர்யாவின் பேனர்களை செருப்பால் அடிப்பது, அவரது உருவபொம்மையை எரிப்பது போன்ற நடவடிக்கைகளில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஈடுபட்டுவருகின்றனர். 

Surya responds arrogantly .. Do not shine behind Thirumavalavan .. Neethiyin kural baskaran Baskaran criticized.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகம்,  திராவிடர் விடுதலைக் கழகம் போன்ற அமைப்புகள் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நடிகர் கருணாஸ், இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் வெற்றிமாறன், இயக்குனர் ப.ரஞ்சித், நடிகர் டி. ராஜேந்தர் ஆகியோர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனாலும் சூர்யா- பாமக மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன். வன்னிய இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் பாமக தலைமையின் நடவடிக்கைகள் உள்ளது என்றும், கட்சி தொண்டர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். விடுதலை சிறுத்தைகள் சார்பில்  அன்புமணி ராமதாஸ் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் பாமகவே சேர்ந்தவரும், நீதியின் குரல் நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான பாஸ்கரன்,  வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், இருளர் சமுதாயத்திற்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் சமுதாயம் வன்னியர் சமுதாயமும், பாட்டாளி மக்கள் கட்சியும்தான். ஆனால் அது அனைத்தையும் ஜெய்பீம் படத்தில் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, பாமகவின் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாகி இருக்கிறார் சூர்யா. அன்புமணி ராமதாஸ் எழுப்பிய 9 கேள்விகளுக்கு நேர்மையாக பதில் கூறாமல், தன்னுடைய ஆணவத்தை, திமிர்தனத்தை காட்டும் வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது சார்ந்து அவர் முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார், அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். போதாத குறைக்கு திருமாவளவனுக்கும் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். பாமக விவகாரம் என்றாலே விடுதலைச் சிறுத்தைகளுக்கு வெள்ளம் தின்பது போலத்தான். இதோ நாங்கள் இருக்கிறோம் என்று திருமாவளவன் அவர்கள் தனது திருவாய் மலர்ந்து சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். பாமக ஏதோ சூர்யாவை மிரட்டுவது போன்றும், விடுதலை சிறுத்தைகள் சூர்யாவை காப்பது போன்றும் நடந்துகொள்கிறார்கள். 

Surya responds arrogantly .. Do not shine behind Thirumavalavan .. Neethiyin kural baskaran Baskaran criticized.

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை கூட அவர் சொந்தமாக எழுதியதாக தெரியவில்லை, யாரோ எழுதிக் கொடுத்ததில் அவர் கையெழுத்து போட்டுள்ளார். பரவாயில்லை, சூர்யாவை நடிக்க கூடாது என்றெல்லாம் பாமக சொல்லவில்லை, அவர் திமிர்த்தனமாக பதில் சொல்லும் போது தான் கோபம் வருகிறது. சூர்யா அவர்களுக்கு யாரோ தவறாக ஆலோசனை வழங்குகிறார்கள். அதையெல்லாம் ஏன் அவர் கேட்டுப் பெறுகிறார் என்று தெரியவில்லை. இப்பொழுது திருமாவளவனை துணைக்கு அழைத்து வருகிறார். திருமாவளவனுடைய சரக்கு மிடுக்கு பேச்சு எந்த அளவுக்கு விமர்சிக்கப்பட்டது என்று எல்லோர்க்கும் தெரியும், சூர்யா சார்ந்திருக்கும்  கவுண்டர் சமுதாய மக்களே எத்தனை பேர் அவரை கண்டித்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்த திருமாவளவன் இப்போது சீறிப் பாய்கிறார். பாமக ஏதோ உன்னை மிரட்டுவது போலவும் அவர் பாமகவினரை கைது செய்ய வேண்டும் என்று காவல்துறையில் புகார் கொடுக்கிறார்.  இதெல்லாம் போகாத ஊருக்கு வழி சொல்கிற ஒரு கதை.

Surya responds arrogantly .. Do not shine behind Thirumavalavan .. Neethiyin kural baskaran Baskaran criticized.

அன்புமணி ராமதாஸ் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு திமிர்த்தனமாக பதில் சொல்லும் நீ (சூர்யா) முதல்வர்  ஸ்டாலின் அவர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பின்னால் ஒளிவது ஏன், இப்படி மாற்று வேலைகளை செய்யும் நீங்கள் நேரடியாக அரசியலுக்கு வாருங்கள், வெளிப்படையாக இதுதான் என் கருத்து, கொள்கை என்று சொல். ஆனால் இன்று திருமாவளவனை ஏன் துணைக்கு அழைத்து வருகிறாய், இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியை விட பன்மடங்கு அம்பேத்கரை நேசித்தது, அம்பேத்கருக்கு சிலைகளை வார்த்தது. அம்பேத்கர் கொள்கைகளை பரப்பியது பாமக என்பதை திருமாவளவன் ஏற்றுக்கொள்வார்.  சூர்யாவும் சூர்யாவின் குடும்பமும் யாரை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளும், அது நெகிழ்வுத் தன்மை உடைய குடும்பமு, கலைஞர் கருணாநிதி ஏற்றுக்கொள்ளும், அம்மையார் ஜெயலலிதாவையும் ஏற்றுக்கொள்ளும், திருமாவளவனை ஏற்றுக்கொள்ளும், ஸ்டாலினை ஏற்றுக்கொள்ளும் வேண்டுமென்றால் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அது நாளைக்கே பாமகவையும் ஏற்றுக் கொள்ளும். மொத்தத்தில் சூர்யா குடும்பத்திற்கு எந்த கொள்கையும் கிடையாது. நீங்கள் பெரிய கொள்கை வாதிகள் போன்று கூப்பாடு போட வேண்டாம் என அவர் கூறியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios