ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவிற்கு தடையில்லை..! ஓபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த உச்ச நீதிமன்றம்
ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவிற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நட்போ,சண்டையோ நீங்கள் பார்த்து கொள்ளுங்கள்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் ஓபிஎஸ் ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்த தீர்ப்பிற்கு எதிராக இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளால் கட்சியின் செயல்பாடுகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது, ஒட்டுமொத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஒருமித்த கருத்தாகும் என இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட் மனுவில் கூறப்பட்டது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஜூலை 11ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டம் தொடர்பான விவகாரத்தில் நாங்கள் எப்படி தலையிட முடியும், நட்போ சண்டையோ நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என கூறினார்கள்.
அதிமுக பொதுக்குழுவிற்கு தடை !! ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை..
சட்டவிதிகளை மாற்ற யார் உங்களுங்கு அதிகாரம் தந்தது? ஓபிஎஸ்-ஈபிஎஸை விளாசும் சசிகலா!!
பொதுக்குழுவிற்கு தடை விதிக்க மறுப்பு
அப்போது ஓபிஎஸ் தரப்பில் கட்சி விதிமுறைகளுக்கு எதிராக யாரேனும் நடந்தால் அது நீதிமன்றங்கள் தலையிட முடியும் என தெரிவித்தனர். இரண்டு பதவிகளையும் தூக்கி எறிந்து விட்டு ஒருவர் மட்டுமே கட்சியை கைப்பற்ற நினைக்கிறார் என்ன ஓபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டியது. இது உங்கள் கட்சி விவகாரம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். கட்சி உள்விவகாரம் மற்றும் பொதுக்குழு செயல்பாடு பற்றி நீதிமன்றம் தலையிட வேண்டும் என நினைக்கிறீர்களா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினர். நட்போ, சண்டையோ நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் ஜூலை 11 ஆம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும்படி ஓபிஎஸ் தரப்பு அப்போது கேட்டுக்கொண்டது. ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து மேல்முறையீட்டு வழக்கில் இரு தரப்பும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படியுங்கள்