சட்டவிதிகளை மாற்ற யார் உங்களுங்கு அதிகாரம் தந்தது? ஓபிஎஸ்-ஈபிஎஸை விளாசும் சசிகலா!!
ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளனர். இந்த நிலையில் அதிமுகவுக்கு இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதிமுகவை முன்பு போல விறுவிறுப்பாக செயல்பட வைக்க ஒற்றை தலைமை முறையே சிறந்தது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். இதற்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுகவில் பிரச்னை வெடித்தது. இந்த ஒற்றைத்தலைமை பிரச்னை தீவிரமைடந்துள்ளது. இதற்கிடையே சசிகலா தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் இன்று சென்னை தி.நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் வழியாக திண்டிவனம் மன்னார்சாமி கோயிலுக்கு அருகிலிருந்து தனது பயணத்தை தொடங்கினார்.
இதையும் படிங்க: ”தமிழகத்தில் இருந்து ஷிண்டே புறப்படுவார் !" அண்ணாமலை கிளப்பிய புது சர்ச்சை
பின்னர் திண்டிவனத்தில் தொண்டர்கள் மத்தியில் சசிகலா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பசு தோல் போர்த்திய புலிகளின் கையில் சிக்கி அதிமுக சின்னாபின்னமாகி வருகிறது. தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் முடங்கியுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் காலியிடங்களில் இரட்டை இலை இல்லாமல் போட்டியிட யார் அதிகாரம் கொடுத்தது? எதற்கும் மயங்காத தன்னலமற்ற தொண்டர்களை கொண்டது அதிமுக. வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக இருந்து அதிமுகவை காக்கவே பொறுமையாக உள்ளேன். அதிமுக சட்டவிதிகளை மாற்ற யார் உங்களுங்கு அதிகாரம் தந்தது? எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை 3 ஆவது பெரிய கட்சியாக மாற்றியவர் ஜெயலலிதா.
இதையும் படிங்க: ஓபிஎஸ்சை நீக்க இந்த காரணம் ஓகே..எடப்பாடி போட்ட ஸ்கெட்ச் ! மறுபடியுமா?
அனைவரும் ஒன்றிணைவதே புரட்சித்தலைவர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு நாம் காட்டும் நன்றியாகும். தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் முடங்கி உள்ளது. அதிமுக தொண்டர்களுக்கான இயக்கம். அதன் நிலையை தற்போது பார்க்கும் போது என் மனது மிகவும் வேதனைப்படுகிறது. தொண்டர்கள் முடங்கினால் கட்சியும் முடங்கிவிடும் என எம்ஜிஆர் சொன்னதை மனதில் வைத்து கொள்ள வேண்டும். எம்ஜிஆர் மறைந்த போது திசை தெரியாத கப்பலாக இருந்த இயக்கத்தை கலங்கரை விளக்கமாக இருந்து கரை சேர்த்தவர் ஜெயலலிதா. தன்னிகர் இல்லா பெரியக்கமாக விளங்கிய நம் இயக்கம் தற்போது அராஜகர்களிடம் சிக்கித் தவிக்கிறது என்று தெரிவித்தார்.