Asianet News TamilAsianet News Tamil

எடியூரப்பா நாளையே ஏன் பெரும்பான்மையை நிரூபிக்க கூடாது..? பாஜகவை பதறவிட்ட உச்சநீதிமன்றம்

supreme court question about karnataka floor test
supreme court question about karnataka floor test
Author
First Published May 18, 2018, 11:25 AM IST


கர்நாடக முதல்வர் எடியூரப்பா, நாளையே ஏன் பெரும்பான்மையை நிரூபிக்க கூடாது? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில், 104 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை கொண்ட பாஜகவின் சார்பில் எடியூரப்பாவிற்கு ஆளுநர், முதல்வராக பதவி பிரமாணம் செய்துவைத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசமும் கொடுத்திருந்தார்.

supreme court question about karnataka floor test

மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததால், அந்த கூட்டணி 115 எம்.எல்.ஏக்களை(குமாரசாமி இரண்டு இடங்களில் வென்றுள்ளதால் ஒரு இடம் காலியாகும்) கொண்டுள்ளது. எனவே 115 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்றுள்ள தங்களை ஆட்சியமைக்க மஜத தலைவர் குமாரசாமி ஆளுநரிடம் உரிமை கோரினார். ஆனால் ஆளுநர் எடியூரப்பாவிற்கு அழைப்பு விடுத்ததால், அதை எதிர்த்து காங்கிரஸ்-மஜத சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

supreme court question about karnataka floor test

அந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. அப்போது, ஆட்சியமைத்துள்ள பாஜகவிற்கு பெரும்பான்மை இருக்கிறது என்றால், நாளையே ஏன் பெரும்பான்மையை நிரூபிக்க கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் அப்படி இல்லையென்றால், பாஜகவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநரின் முடிவு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

விசாரணையின் போது நீதிபதிகள் கருத்துத்தான் தெரிவித்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios