Supreme court permit to living togethat under 21

வயதுக்கு வந்த ஆணும், பெண்ணும் விருப்பம் இருந்தால் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ஆண்கள் 21 வயதும், பெண்கள் 18 வயதும் பூர்த்தி அடைந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும்.

இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த நந்தகுமார் என்ற 20 வயது இளைஞர் , துஷாரா என்ற 20 வயதுப் பெண்ணை திருமணம் செய்து கொண்டனர். துஷாராவுக்கு திருமண வயதான 18 வயது ஆகிவிட்டது. ஆனால், நந்தகுமாருக்கு திருமண வயதான 21 வயது ஆகவில்லை.

அப்போது வயது வந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ உரிமை உள்ளது. இதை சட்டம் இயற்றும் சபைகளும் அங்கீகரித்துள்ளன. குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தில் இதுபற்றிய சட்டப்பிரிவு இடம்பெற்றுள்ளது.

இந்த வழக்கை பொறுத்தவரை, நந்தகுமாரும், துஷாராவும் ‘மேஜர்’ வயதை எட்டியவர்கள். அவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கான தகுதியை எட்டாவிட்டாலும் கூட திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ உரிமை உள்ளது.



துஷாரா, தனது தந்தையுடன் செல்ல வேண்டும் என்ற கேரள ஐகோர்ட்டு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தான் யாருடன் சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்யும் உரிமை, துஷாராவுக்கு இருக்கிறது என நீதிபதிகள் அதிரடியாக தெரிவித்தனர்..

கேரள மாநிலத்தை சேர்ந்த, மதம் மாறி திருமணம் செய்து கொண்ட ஹாதியா-ஷபின் ஜகான் திருமண வழக்கிலும், அவர்கள் பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்தவர்கள் என்பதால், அவர்களின் திருமணத்தை உறுதி செய்தோம் என்றும் நீதிபதிகள் கூறினர்..