Asianet News TamilAsianet News Tamil

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நடிகை வழக்கு... 6 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நடிகை தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

supreme court issued notice to admk former minister in actress case
Author
Delhi, First Published May 13, 2022, 3:58 PM IST

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நடிகை தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுகவில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக சில ஆண்டுகள் பதவி வகித்த மணிகண்டன் என்பவர் ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர். இவர் அமைச்சராக சில ஆண்டுகள் இருந்தார். பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் இவர் மீது பாலியல் புகார் ஒன்றைத் துணை நடிகை ஒருவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்தார். சென்னை, பெசன்ட் நகரில் வசிக்கும் 36 வயது துணை நடிகை, தமிழில் நாடோடி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மே 28 அன்று புகார் அளித்தார். அதில், மலேசியாவைச் சேர்ந்த நான், சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதரகத்தில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் பணியாற்றினேன். 2017ல் அதிமுக ஆட்சியில் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுடன் நட்பு ஏற்பட்டது. அவர் என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.

supreme court issued notice to admk former minister in actress case

5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்தோம். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, என்னைத் திருமணம் செய்து கொள்வதாகத் தெரிவித்தார். அவருடன் இருந்த காலகட்டத்தில் 3 முறை கருவுற்றேன். வலுக்கட்டாயமாக கருவைக் கலைக்கச் செய்தார். தற்போது என்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்து மிரட்டுகிறார். அவருடன் நான் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரவச் செய்து விடுவதாக மிரட்டுகிறார். 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு, தற்போது என்னைத் திருமணம் செய்ய மறுத்து, கொலை மிரட்டல் விடுக்கும் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.  இந்த புகாரின் அடைப்படிடையில் சென்னை அடையாறு மகளிர் போலீஸ் மணிகண்டன் மீது 8 பிரிவில் வழக்கு பதிவு செய்தது. இதை அடுத்து கடந்த வருடம் ஜூன் 20ம் தேதி தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.

supreme court issued notice to admk former minister in actress case

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றனம் மணிகண்டனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டிருந்தது. மணிகண்டன் ஜாமினை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் நடிகை மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். வழக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரித்து முடிக்கவும் நடிகை உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். உச்சநீதிமன்ற தரைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகை தொடர்ந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மணிகண்டனின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கில் தமிழக காவல்துறையும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நடிகை தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் 6 வாரத்தில் பதில் அளிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios