Asianet News TamilAsianet News Tamil

இந்த ஆண்டில் 3வது முறையாம்: உச்ச நீதிமன்றத்தில் அப்படி என்ன விசாரணை நடந்தது தெரியுமா?

மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பாக சிவ சேனா உள்ளிட்ட கட்சிகள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று விசாரணை செய்தது. இதனையடுத்து இந்த ஆண்டில் உச்ச நீதிமன்றம் 3வது முறையாக விடுமுறை நாளில் சிறப்பு விசாரணையை நடத்தி உள்ளது.
 

supreme court enquiry in sunday
Author
Delhi, First Published Nov 25, 2019, 9:58 AM IST

மிகவும் முக்கியத்துவம் மற்றும் அவசர வழக்குகளை அதன் தன்மை பொறுத்து உச்ச நீதிமன்றம் எந்தநாளிலும் விசாரிக்கும். ஆனால் அது போன்ற நிகழ்வுகள் நிகழ்வது அல்லது நடைபெறுவது மிகவும் ஆபூர்வமானதாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டில் இதுவரை உச்ச நீதிமன்றம் 3 முறை விடுமுறை நாளில் சிறப்பு விசாரணை மேற்கொண்டுள்ளது. முதல் சம்பவம் கடந்த ஏப்ரல் 20ம் தேதி நடந்தது.

supreme court enquiry in sunday

அப்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் மீது நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் குற்றஞ்சாட்டை சுமத்தினார். இந்த குற்றச்சாட்டு மீதான விசாரணையை அலுவலக விடுமுறை தினமான சனிக்கிழமையன்று (ஏப்ரல் 20) உச்ச நீதிமன்ற அமர்வு நடத்தியது.

supreme court enquiry in sunday

அடுத்து, பல பத்தாண்டுகளாக விடை கிடைக்காமல் சவ்வாக இழுத்து வந்த ராம் ஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கில், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை விடுமுறை தினமான சனிக்கிழமையன்று (நவம்பர் 9) அறிவித்தது. இந்நிலையில் 3வது முறையாக உச்ச நீதிமன்றம் விடுமுறை தினமான நேற்று சிறப்பு வழக்கு விசாரணையை நடத்தியது. மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பாக சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் நேற்று விசாரணை நடத்தியது.

Follow Us:
Download App:
  • android
  • ios