"இலங்கையில் பெண்களின் உதிரம் கொட்டப்படுகிறது..அந்த நாடு உருப்படாது.. அன்றே சொன்ன ரஜினிகாந்த் - வைரல் வீடியோ !
Sri Lanka : இலங்கை அதிபர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில், அந்நாட்டின் தலைநகர் கொழும்பு தற்போது போர்க்களமாக காட்சியளிக்கிறது.
அரசுக்கு எதிராக இரு மாதங்களாக கடும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை கொழும்புவில் மகிந்தாவின் ஆதரவாளர்கள் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்து வன்முறையாக மாறியது. இதன் காரணமாக அங்கு அவசர நிலை பிரகணடப்படுத்தப்பட்டது. சில மணிநேரங்களிலேயே பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக மகிந்தா அறிவித்தார்.
மகிந்தா ராஜினாமாவை அறிவித்த நிலையிலும், அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்யாததால் கொழும்புவில் வன்முறை சம்பவங்கள் வேகமாகப் பரவி வருகின்றன. இதுவரை மட்டும் கொழும்புவில் நடைபெற்ற வன்முறையில் 130க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும், முன்னாள் அமைச்சர் ஒருவரின் காரை மக்கள் குளத்தில் மூழ்கடித்துள்ளனர். போராட்டம் கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், விடுமுறையில் உள்ள காவலர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆளும் கட்சி எம்.பியும் முன்னாள் அமைச்சருமான அமரகீர்த்தி என்பவரின் வாகனத்தை போராட்டக்காரர்கள் மறித்துள்ளனர். அவர்கள் மீது எம்பி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் எம்பி அமரகீர்த்தி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.போராட்டம் கலவரமான நிலையில் இலங்கையின் பல்வேறு பகுதிகள் போர்களமாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை பற்றி பேசிய காணொளி ஒன்று தற்போது வைரல் ஆகிவருகிறது.அந்த காணொளி 2008ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறும் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என நடிகர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 'இலங்கை மட்டுமல்ல, எந்த நாட்டிலும் சாமான்ய மக்கள் பாதிக்கப்படக்கூடாது. எந்தவொரு நாடும், ஏழை மக்களின் வேதனைக் காற்று பட்டாலே அந்த நாடு உருப்படாது. எந்த விதத்திலும் சாமானியர்கள் கஷ்டப்படக் கூடாது.
குழந்தைகள் மற்றும் பெண்களின் உதிரம் அந்த மண்ணில் கொட்டுகிறது. தமிழர்கள் இலங்கையில் புதைக்கப்படவில்லை, விதைக்கப்படுகிறார்கள். யுத்தத்தில் எல்லாரையும் அழிச்சா கூட, அந்த விதை உங்களை நிம்மதியாக வாழ விடாது' என்று கூறியுள்ளார். இந்த காணொளியை தற்போது ரஜினி ரசிகர்கள், தமிழ் தேசியவாதிகள்,நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வருகின்றனர்.