Asianet News TamilAsianet News Tamil

கருணாநிதிக்கு திடீர் புகழாரம்.. திமுகவில் இணையப்போகிறார் மகேந்திரன்?

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரை புகழ்ந்து மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணை தலைவர் மகேந்திரன்  ட்வீட் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sudden praise for Karunanidhi.. ex mnm Mahendran join to DMK?
Author
Coimbatore, First Published Jun 3, 2021, 6:19 PM IST

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரை புகழ்ந்து மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணை தலைவர் மகேந்திரன்  ட்வீட் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக டாக்டர் மகேந்திரன் இருந்தார். கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தனது சொந்த ஊரான கோவையில் போட்டியிட்டு மகேந்திரன் தோல்வியடைந்தார். இருப்பினும் 1.44 லட்சம் வாக்குகள் பெற்று பிற கட்சியினரை ஆச்சரியப்பட வைத்தார். சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இருப்பினும் 36 ஆயிரம் வாக்குகள் பெற்று திராவிடக் கட்சிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாம் பிடித்தார். ஆனால் தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் படுதோல்வியை சந்தித்ததை அடுத்து, அக்கட்சியில் மகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் வெளியேறினர்.

Sudden praise for Karunanidhi.. ex mnm Mahendran join to DMK?

மேலும், கமல்ஹாசன் மீது மகேந்திரன் விமர்சனங்களையும் வைத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கமல்ஹாசனும் மகேந்திரனை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து, அவர் திமுகவில் இணையப்போவதாக தகவல் வெளியாகின. கொங்கு மண்டலத்தில் வலிமையான திமுக முகங்கள் இல்லாததால் மகேந்திரனை திமுக பக்கம் இழுத்து முக்கிய பதவி வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரை புகழ்ந்துள்ளார்.

இதுதொடர்பாக மகேந்திரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சுய மரியாதை இயக்கத்தையும், சமூக நீதியையும், திராவிட சித்தாந்தத்தையும் தம் சொல்லால், செயலால், எழுத்தால் உலகறியச் செய்தவர்; திருக்குவளை ஈன்றெடுத்த திராவிட சூரியன்,5 முறை தமிழகத்தை ஆண்ட, ஐயா திரு. கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறப்பு ஓர் சரித்திரம்! என்று குறிப்பிட்டு அதை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு டாக் செய்துள்ளார். இந்த செய்தியின் மூலம் மகேந்திரன் திமுகவில் இணைய இருப்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios