Asianet News TamilAsianet News Tamil

Babji Madan பப்ஜி மதன் மருத்துவமனையில் திடீர் அனுமதி... சிறையில் நடந்தது என்ன..?

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்ஜி மதன் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Sudden admission in pabg Madan Hospital ... What happened in jail ..?
Author
Tamil Nadu, First Published Dec 6, 2021, 3:15 PM IST

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்ஜி மதன் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.Sudden admission in pabg Madan Hospital ... What happened in jail ..?

சென்னை வேங்கைவாசல் பகுதியைச் சோ்ந்த 29 வயதான மதன் என்பவர் இரு யூ-டியூப் சேனல்களை நடத்தி வந்தாா். அதில் ஆன்லைன் கேம்மான தடை செய்யப்பட்ட பப்ஜி கேம்மை எப்படி விளையாடுவது என யூ-டியூப் லைவ்வில் கேம் விளையாடி கொண்டே பேசுவார். முகம் கூட காட்டாத பப்ஜி மதனுக்கு சிறு பிள்ளைகள் முதல் அனைத்து தர மக்களும் ரசிகர்களாக இருந்தனர். அதோடு யூ-டியூப்பில் பேசும் இவர் பல நேரங்களில் உற்சாகம் தருகிறேன் என அசிங்கமான வார்த்தைகளில் பேசுவதும், பெண்கள் குறித்த ஆபாசமாக பேசுவதுமாக இருந்து வந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் இவரை போன்ற ஆட்கள் தவறாக பேசுவது சிறு வயது பிள்ளைகளுக்கு சரி என தோன்றி இவரை போன்று பேச ஆரம்பிக்கும் அபாயம் உள்ளதென பல யூ-டியூப் சேனல்கள் அறிவுறுத்தினார். ஆனால், அப்போதும் அவர் நிறுத்தியப்பாடில்லை.Sudden admission in pabg Madan Hospital ... What happened in jail ..?

இந்நிலையில், வடபழனியைச் சோ்ந்த பி.கே.அபிஷேக் ரவி, சென்னை பெருநகர காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மதன் கடந்த ஜூன் மாதம் 16-ஆம் தேதி சேலத்தில் கைது செய்யப்பட்டாா். அதோடு அவர் மீது குண்டா் தடுப்புச் சட்டமும் பாய்ந்த கடந்த ஜூலை 6-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

தற்போது புழல் சிறை வளாகத்தில் இருக்கும் பப்ஜி மதன், முதுகு வலியால் பாதிக்கப்பட்டு சிறைக்குள் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். ஆனால், அவரின் உடல் நிலை சரியடையாத காரணத்தால் தற்போது அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  சிறை கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios