பாஜக மூத்த தலைவரும், எம்பியுமான சுப்பிரமணிய சாமி டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.

அதிமுகவில் 2 பேர், 3 பேர் என பிரிந்து இருந்தால் அதற்கு பேர் அணியா... அதன்பேர் அதிமுக தலைமை என்று சொல்வதா... உண்மையான அதிமுக என்பது சசிகலா தலைமையில் இருப்பது மட்டுமே.

ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா தலைமையில்தான் ஆட்சி அமைக்கப்பட்டது. அவர், சொன்னதன்பேரில் தான், கவர்னர் ஆட்சியை அமைத்தார். தற்போது ஆட்சியும் நன்றாகவே நடந்து வருகிறது.

சசிகலா தலைமையிலான கட்சி சிறப்பாக செயல்பட்டதாலும், தனி மெஜாரிட்டியில் இருந்ததாலும்தான் எடப்பாடி ஆட்சியை பிடித்தார். நடத்தி வருகிறார். அதிமுகவின் உண்மையான தலைவர்கள் சசிகலாவும், டிடிவி.தினகரனும்தான். அதை யாரும் மாற்ற முடியாது. 3 அணிகள் என கூறுவது அவசியமே இல்லை.

தமிழகத்துக்கு கவர்னர் தேவையே இல்லை. ஆட்சி நன்றாக தானே நடக்கிறது. பிறகு எதற்காக நிரந்தர கவர்னரை நியமிக்க வேண்டும். ஆட்சி நல்ல விதமாக இருந்தால், கவர்னர் தேவையே இல்லை. கவர்னர் எந்த மாநிலத்தில் இருந்தும், பொறுப்புக்காக அதை பார்த்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.