subramaniyan swamy talks about admk
அதிமுக ஆட்சியை 4 ஆண்டுகளுக்கு யாராலும் கலைக்க முடியாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில்தற்போது நடந்து வரும் அதிமுக ஆட்சியை 4 ஆண்டுகள் நீடிக்கும் என்றார். அதிமுக ஆட்சியை யார் நினைத்தாலும் கலைக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரிய அவசர சட்டத்துக்கான வரைவு மசோதா, மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
