நடிகர்கள் ஒரு தொண்டராக இருக்கலாமே தவிர "அரசியல் தலைவராக நினைத்து கூட பார்க்க கூடாது"..! சுப்ரமணிய சாமி அதிரடி..! 

திரைப்பட நடிகர்கள் அரசியல் வருவதற்கான எண்ணத்தை கொண்டிருக்கக் கூடாது என்றும் அப்படி ஒரு வேளை வந்தால் அவர்கள் தொண்டராக வர நினைக்கலாமே தவிர தலைவராக இருக்க வேண்டும் என நினைக்கக் கூடாது என சுப்பிரமணியசாமி அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற சுப்பிரமணிய சாமி தரிசனம் முடித்த கையோடு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, "ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்ற பிறகு, பல்வேறு மாற்றத்தை கொண்டு வந்து உள்ளார். குறிப்பாக புதிய அறங்காவலர் குழுவில் பல நல்ல தலைவர்கள் இருக்கின்றனர். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, அரசுக்கு புறம்பாக போராட்டம் நடத்துவது, தனியார் சொத்துக்களை சேதப்படுத்துவது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தண்டிக்கப்பட வேண்டும். அவர்களை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். சொத்துக்களை சேதப்படுத்தியன் இழப்பீட்டை அபராதமாக வசூலிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசிய சுப்ரமணியசாமி நாட்டின் பாதுகாப்புக்காக மட்டுமே திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக வெளியேறி, இந்தியாவில் வசித்து வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதே வேளையில் எந்த ஆதாரமும் இல்லாமல் நம் நாட்டுக்குள் ஊடுருவியவர்களை வெளியேற்றவும், இந்த சட்டம் பரிந்துரைக்கின்றது என தெரிவித்தார். அப்போது திரைப்பட நடிகை நடிகர்களின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவிக்கும் போது, திரைப்பட நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது. அவ்வாறு அரசியலுக்கு வந்தால் வரலாமே தவிர தலைவராக வர நினைக்கக் கூடாது என சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார்.