subarmaniyan samy tweet about dmk admk cadres

உலக வரலாற்றிலேயே ஆபாசமாக வசைமாரி பொழியும் கோழைகள் நிறைந்தது தமிழகத்தின் திராவிட இயக்கங்கள் தான் என்றும் இந்த இயக்கங்களில் கைக்கூலிகள் அதிகமாக உள்ளனர் என்றும் பாஜக எம்.பி. சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமியின் பேட்டி, அறிக்கை, டுவிட்டர் பதிவுகள் அவ்வப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருவது தெரிந்ததே.

கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவது குறித்து கருத்துத் தெரிவித்த சுப்ரமணியன் சாமி, நடிகர் ரஜினிகாந்த் படிப்பறிவு அற்றவர். அவருக்கு அரசியலுக்கு வரத் தகுதி இல்லை. அவர் மீது நிதி மோசடி குற்றச்சாட்டுகள் உள்ளன" என்று கூறினார்.

மேலும் காமராஜரின் படிப்பறிவின்மையை ஆர்கே 420 (ரஜினிகாந்த்)யோடு ஒப்பிட முடியாது என்றும் காமராஜர் அரசியல் தொண்டராக இருந்து முதலமைச்சராக உயர்ந்தவர். கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியவர் என்று தெரிவித்திருந்தார்.
ரஜினிகாந்த் அரசியலிக்கு வராமல் இருப்பதே அவருக்கு நல்லது என்றும் வந்தால் பல பிரச்னைகளை அவர் சந்திக்க நேரிடும் பகிரங்கமாக சுப்ரமணிய்ன சாமி மிரட்டல்விடுத்தார்.

இதேபோல் ஜிஎஸ்டி கண்டிப்பாக கொண்டுவரப்பட வேண்டும் என்றும் ஆனால் இப்போதல்ல 2019 ல் தான் " என்று பாஜகவுக்கு எதிராகவே கருத்து தெரிவித்தார்.

சுப்ரமணியன்சாமி பரபரப்புக்காக மட்டுமே இது போன்ற பதிவுகளையும் கருத்துக்களையும் வெளியிடுகிறார் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் உள்ள திராவிட இயக்கங்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சுப்ரமணிய சாமி பரபரப்பான கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் " உலக வரலாற்றிலேயே ஆபாசமாக வசைமாரி பொழியும் கோழைகள் நிறைந்தது தமிழகத்தின் திராவிட இயக்கங்கள் தான் என்றும் இந்த இயக்கங்களில் கைக்கூலிகள் அதிகமாக உள்ளனர் என்றும் பதிவிட்டுள்ளார். இது திமுக, அதிமுக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.