நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு புளுகு மூட்டை என்று திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் நிகழ்ச்சி ஒன்று அண்மையில் நடந்தது.கலைஞர் மறைந்த பிறகு நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பேசியபோது அவருடனான தனது பழக்கம் குறித்த தகவல்களை சீமான் பகிர்ந்து கொண்டார். அப்போது கலைஞரின் சட்டைப் பையில் இருக்கும்பேனாவை எடுத்து எழுதிவிட்டு மீண்டும் கலைஞரின் சட்டைப் பையில் வைக்கும் அளவிற்கு தனக்கு அவருடன் நெருக்கமான பழக்கம் இருந்ததாக சீமான் கூறியிருந்தார்.

வழக்கம் போல் சீமான் பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டுள்ளார் என்று தி.மு.கவினர் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் சீமானை கலைஞரிடம் அறிமுகப்படுத்திய சுப வீரபாண்டியன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சீமான் மற்றும் கலைஞர் இடையிலான பழக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சுப. வீரபாண்டியன் அளித்த பதில் பின்வருமாறுதனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் சீமான் மற்றும் கலைஞர் இடையிலான பழக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சுப. வீரபாண்டியன் அளித்த பதில் பின்வருமாறு:- சீமான் அப்போது வாழ்த்துகள் என்று திரைப்படம் எடுத்திருந்தார். அந்த படத்தின் தலைப்பு தொடர்பாக சீமானுக்கு
ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அதாவது வாழ்த்துகள் என்ற டைட்டிலில் வாழ்த்துக்கள் என்று க் சேர்த்து எழுத வேண்டுமா? இல்லை க் சேர்க்க கூடாதா? என்று கலைஞரை சந்தித்து கேட்க சீமான் விரும்பினார். எனக்கு நன்கு அறிமுகம் ஆனவர் என்கிற வகையில் அவர் இயக்கத்தில் வெளியான தம்பி திரைப்படம் வெற்றி பெற்று இருந்த காரணத்தினால் கலைஞரை சந்திக்க சீமானை அழைத்துச் சென்றேன்.

அப்போது கலைஞரிடம் தனது சந்தேகத்தை கேட்டு சீமான் தெளிவுபட்டுக் கொண்டார். அதன் பிறகு வாழ்த்துகள் என்றே தனது படத்திற்கு கலைஞர் கூறியபடி அவர் டைட்டில் வைத்தார். இது தான் கலைஞருக்கும் – சீமானுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின் போது நடைபெற்றது. அதன் பிறகு கலைஞரை சீமான் சென்று சந்தித்தது போல் எனக்கு நினைவு இல்லை. கலைஞரின் சட்டைப் பையில் இருந்து பேனாவை எடுத்து எழுதிவிட்டு மீண்டும் அவர் சட்டைப் பையில் வைக்கும் அளவிற்கு அவருடன் தனக்கு பழக்கம் என்று சீமான் கூறியதில் உண்மை இல்லை. ஏனென்றால் தி.மு.க பொதுச் செயலாளரும் கலைஞரின் நெருங்கிய நண்பருமான பேராசிரியர் அன்பழகன் கூட கலைஞர்m சட்டைப் பையில் இருந்து பேனாவை எடுத்து எழுதுவாரா? என்பது சந்தேகம் தான்.

எனவே சீமான் பொய் சொல்லலாம், ஆனால் பொருந்தப் பொய் சொல்லி பழக வேண்டும் என்று சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார். தொடர்ந்து சீமான் பொய் பேசுவதாக அடுத்தடுத்து வீடியோக்கள் வெளியாகி வரும் நிலையில் சுப.வீரபாண்டியன் பேச்சுக்கு
தற்போது வரை சீமான் பதில் அளிக்கவில்லை.