ஆளத் தெரியாத இரண்டு பேர் நாட்டை ஆள்வதாகவும், தலைவிக்குக்கூட சரியாக சிலை வைக்கத் தெரியாதவர்கள் என்றும் திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை, அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அண்மையில் திறக்கப்பட்டது. சிலையின் உருவம் ஜெயலலிதாவைப்போல் இல்லை என்று கடும் விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில், சிலையை மாற்றுவதாக அதிமுக தலைமை கூறியுள்ளது.

இந்த நிலையில், தலைவிக்குக் கூட சரியாக சிலை வைக்கத் தெரியாத இரண்டு பேர் நாட்டை ஆள்வதாக குற்றம் சாட்டினார்.

திருவள்ளூர் மாவட்டம் புழல் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், திமுக - அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து, காவிரிக்காக குரல் கொடுத்திருப்பது நாகரீகமான நல்ல துவக்கம் என்றார்.

அதேநேரம், ஆளத் தெரியாத இரண்டுபேர் நாட்டை ஆள்வதாகவும், தலைவிக்குக் கூட சரியாக சிலை வைக்கத் தெரியாதவர்கள் என்றும் சுபவீ கடுமையாக விமர்சனம் செய்தார். நடிகர்களை நாடு சீரழிந்து வருவதாகவும், சுப.வீரபாண்டியன் கூறினார்.