Asianet News TamilAsianet News Tamil

உயிரிழந்த செய்தியை கேட்டதுமே ரொம்ப கஷ்டமா போச்சு.. இரங்கல் தெரிவித்த கையோடு நிவாரணம் அறிவித்த முதல்வர்.!

சேலம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

students drown death..CM Stalin Condolence Relief announcement
Author
First Published Apr 25, 2023, 1:21 PM IST | Last Updated Apr 25, 2023, 1:21 PM IST

சேலம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- சேலம் மாவட்டம், சேலம் வட்டம், கன்னங்குறிச்சி தாமரைநகர் என்ற இடத்திலுள்ள புது ஏரியில் 22-4-2023 அன்று நண்பகல் குளிக்கச் சென்ற கன்னங்குறிச்சி கிராமம், கோவிந்தசாமி காலனியைச் சேர்ந்த பிரசாந்த், த/பெ.சம்பத் ( 17) மற்றும் பாலாஜி, த/பெ.கிருஷ்ணமூர்த்தி (16) ஆகிய இரண்டு மாணவர்களும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.  

students drown death..CM Stalin Condolence Relief announcement

 இதேபோல், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், வி.குமாரமங்கலம் கிராமம் பெரியகாலனியைச் சேர்ந்த தினேஷ், த/பெ.தெய்வசிகாமணி (14) மற்றும் இன்பரசன், த/பெ.சுந்தரபாண்டியன் ( 8) ஆகிய இருவரும் 23-4-2023 அன்று காலை அதே கிராமத்திலுள்ள ஏரியில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினையும் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.   

students drown death..CM Stalin Condolence Relief announcement

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios