காப்பு, கம்மல், செயின், கயிறு கட்ட மாணவர்களுக்கு தடை.. பள்ளிக்கு செல்போன் கூடாது.. சமூக பாதுகாப்பு துறை அதிரடி
பள்ளிக்கூட மாணவர்கள் காப்பு, கம்மல், செயின், கயிறு கட்ட தடைவிதித்து சமூகப் பாதுகாப்புத் துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. பிறந்த நாளன்றும் கூட சீருடையில்தான் வரவேண்டும், டூவீலர், பள்ளிக் கூடங்களில் மொபைல் போனுக்கு அனுமதி இல்லை, டாட்டூ வுடன் பள்ளிக்கூடம் வர அனுமதி இல்லை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கூட மாணவர்கள் காப்பு, கம்மல், செயின், கயிறு கட்ட தடைவிதித்து சமூகப் பாதுகாப்புத் துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. பிறந்த நாளன்றும் கூட சீருடையில்தான் வரவேண்டும், டூவீலர், பள்ளிக் கூடங்களில் மொபைல் போனுக்கு அனுமதி இல்லை, டாட்டூ வுடன் பள்ளிக்கூடம் வர அனுமதி இல்லை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் கட்டுப்பாடின்றி அட்ராசிட்டி யில் ஈடுபட்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் சமூகப் பாதுகாப்பு துறை பள்ளி மாணவர்களுக்கு இவ்வாறு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதையும் படியுங்கள் : என்எஸ்இ ஒட்டுக்கேட்பு விவகாரம்: தொடர் சிக்கலில் சித்ரா: அமலாக்கப் பிரிவு புதிய வழக்கு
இது தொடர்பாக வேலூர் மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் விவரம் பின்வருமாறு:- மாணவ மாணவியர் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வர வேண்டும், மாணவ மாணவியர் தினமும் பள்ளி சீருடையை சுத்தமாக அணிய வேண்டாம், தலையில் எண்ணெய் வைத்து தலைவார வேண்டும், கை கால் நகங்களை சுத்தமாக வெட்ட வேண்டும் மற்றும் தலைமுடியை சரியான முறையில் வெட்டப்பட வேண்டும். ஒவ்வொருவரும் காலணி அணிந்திருக்க வேண்டும், மாணவர்கள் டக்கின் செய்யும்போது சீருடை வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்: மருத்துவமனையில் முதலமைச்சர் அனுமதி..! நுரையீரல் பாதிப்பு எப்படி உள்ளது..? சிடி ஸ்கேன் முடிவு இதோ...
பெற்றோர் கையெழுத்துடன் வகுப்பு ஆசிரியரிடம் அனுமதி பெற்று தான் விடுப்பு எடுக்க வேண்டும், பள்ளிக்குச் செல்லும் போது அடையாள அட்டை அணிய வேண்டும், பிறந்தநாள் என்றாலும் மாணவ மாணவியர்கள் பள்ளி சீருடைகளில்தான் பள்ளிக்கு வரவேண்டும், மாணவ மாணவியர்களுக்கு பள்ளிக்கு இருசக்கர வாகனம், மொபைல் போன் போன்றவற்றை பள்ளிக்கு கொண்டு வர அனுமதி இல்லை, வகுப்பறையில் பாடங்கள் கவனமாக கவனிக்க வேண்டும், ஆசிரியர் பேச்சை மாணவர்கள் கேட்கவேண்டும், மாணவ மாணவியர்கள் சீருடையில் பள்ளிக்கு வரும்போது கூடுதலாக கலர் டிரஸ் எடுத்து வரக்கூடாது.
வகுப்பில் மாணவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், அடிக்கடி கை கால்கள் கழுவவேண்டும், மாணவர்கள் எங்கு சென்றாலும் வரிசையாக செல்ல வேண்டும், மாணவ-மாணவிகள் போதை பொருட்களை பயன்படுத்தக் கூடாது மற்றும் எந்த ஒரு டாட்டூ போட்டுக்கொண்டு பள்ளிக்கு வர அனுமதி இல்லை, மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு செல்லும் போது அவர்களுடன் சீருடை சட்டையில் உள்ள பொத்தான்களை கழற்றக் கூடாது, வகுப்பறையில் நோட்டு புத்தகங்களை கிழித்தெறிய கூடாது, மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது காப்பு, கம்மல், செயின், கயிறு போன்ற ஆபரணங்கள் ஏதும் அணியக்கூடாது. மாணவ மாணவியர்கள் PET வகுப்பின் போது பள்ளி வளாகத்திற்குள்ளேயே விளையாடவேண்டும், வெளியே செல்லக்கூடாது. ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது மாணவ மாணவியர்கள் வகுப்பறையை விட்டு வெளியில் செல்லக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல மாணவ மாணவியர்களிடம் நல்லொழுக்க கதைகள், நீதிநெறி கதைகள், தெனாலிராமன் கதைகள், காப்பியக் கதைகள் நாட்டுப்பற்றை ஊட்டும் சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகள் போதிக்கப்பட வேண்டும், சுத்தம் கல்வி தரும், மாணவ-மாணவிகள் இடையே அமைதி கலாச்சாரத்தை ஊக்குவித்தல், மதிப்புகளை வளர்த்தல், அணுகுமுறைகளும் உத்திகளும் மாணவ மாணவிகளிடையே ஊக்குவித்தல். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் இடையிலான உறவு முறைகளை மேம்படுத்துதல், மாணவ மாணவிகளிடையே சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல். மாணவ மாணவியர்களின் குடும்ப உறவு முறைகளில் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவை வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.