எது நடக்கக்கூடாது என்று வேண்டிக் கொண்டேனோ அதுநடந்துடுச்சு.. ரொம்ப வேதனையா இருக்கு.. கலங்கும் அன்புமணி.!
நீட் விலக்கு சட்டத்திற்கு ஆளுனரின் ஒப்புதல் பெற 234 நாட்கள் ஆயின. நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு 129 நாட்களாகும் நிலையில், அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது வருத்தமளிக்கிறது.
நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது மட்டும் தான் மாணவச் செல்வங்களை தற்கொலையிலிருந்து காப்பாற்றும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் எடுக்காததால், சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த லக்சனா ஸ்வேதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படிங்க;- இவ்வளவு நடந்த பிறகும் அவசர சட்டம் இயற்றுவதில் எதுக்கு தயக்கம்? மக்களைக் காக்க அரசுக்கு மனம் இல்லையா? அன்புமணி
நீட் தேர்வு முடிவு வெளியாகும் போதே என்ன நடக்கக்கூடாது என்று வேண்டிக் கொண்டேனோ அது நடந்து விட்டது வேதனையளிக்கிறது. நீட் தோல்வியைக் கண்டு மாணவர்கள் துவளக்கூடாது. மன உறுதியுடன் செயல்பட்டு மீண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நீட் விலக்கு சட்டத்திற்கு ஆளுனரின் ஒப்புதல் பெற 234 நாட்கள் ஆயின. நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு 129 நாட்களாகும் நிலையில், அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது வருத்தமளிக்கிறது.
நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது மட்டும் தான் மாணவச் செல்வங்களை தற்கொலையிலிருந்து காப்பாற்றும். எனவே, நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற்று, மாணவச் செல்வங்களைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- தமிழ் பயிற்று மொழியாக எப்போது மாறும் ? தலையில் அடித்து கதறும் ராமதாஸ்.! காத்திருக்கும் தமிழ் ஆர்வலர்கள் !