லாவண்யாவின் பதில்கள் தெளிவானவையா இல்லையா என்பதும் வழக்கின் விசாரணையில் தான் முடிவு செய்ய முடியுமேயன்றி, அமைச்சர் தீர்ப்பை சொல்வது போன்ற கருத்தை வெளியிடுவது முறையல்ல. மேலும், முழுமையான விசாரணையில் தான் உண்மை வெளிவரும் என்று அமைச்சர் அதே பேட்டியில் கூறியுள்ள நிலையில், மதமாற்றம் நடக்கவில்லை என்று கூறியிருப்பது முறையா? 

லாவண்யாவின் பதில்கள் தெளிவானவையா இல்லையா என்பதும் வழக்கின் விசாரணையில் தான் முடிவு செய்ய முடியுமேயன்றி, அமைச்சர் தீர்ப்பை சொல்வது போன்ற கருத்தை வெளியிடுவது முறையல்ல என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்;- விடுதி காப்பாளர் தான் லாவண்யாவின் மன உளைச்சலுக்கு காரணம் என்று கூறப்பட்டாலும், அவர் தான் லாவண்யாவின் கல்விக்கான கட்டணத்தை செலுத்தியுள்ளார். மற்ற விவரங்கள் வழக்கு விசாரணையில் தெரிய வரும். பெண்ணின் மன உளைச்சலுக்கு காப்பாளர் தான் காரணம் என்பதால் தான் அவர் கைது செய்யப்பட்டார். லாவண்யாவிடம் வீடியோ பதிவை எடுத்திருக்க கூடாது. ஆத்திரமூட்டும் கேள்விகளை வீடியோ எடுத்த நபர் கேட்டுள்ளார். தெளிவான பதில்களை அந்த பெண் கூறவில்லை. ஆனால், அந்த பெண் மரணம் அடைந்து விட்டார். இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருக்கிறார். 

இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷிக்கு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார். அதில், பள்ளி கல்வி கட்டணத்தை விடுதி காப்பாளர் கொடுத்தார் என்பதற்காக அவர் மன உளைச்சலை ஏற்படுத்தலாமா? கட்டணத்தை அவர் கொடுத்தார் என்பதால் தான் மதம்மாற நிர்பந்தித்து மன உளைச்சலை ஏற்படுத்தினார் என்பது தெளிவாகிறது. மேலும், வீடியோவை எடுத்திருக்கக் கூடாது என்று அமைச்சர் சொல்வது, சென்னை உயர்நீதி மன்றம் இது குறித்து உத்தரவிட்டுள்ளதற்கு நேரெதிரான கருத்தாகும். 

லாவண்யாவின் பதில்கள் தெளிவானவையா இல்லையா என்பதும் வழக்கின் விசாரணையில் தான் முடிவு செய்ய முடியுமேயன்றி, அமைச்சர் தீர்ப்பை சொல்வது போன்ற கருத்தை வெளியிடுவது முறையல்ல. மேலும், முழுமையான விசாரணையில் தான் உண்மை வெளிவரும் என்று அமைச்சர் அதே பேட்டியில் கூறியுள்ள நிலையில், மதமாற்றம் நடக்கவில்லை என்று கூறியிருப்பது முறையா? வழக்கை திசை திருப்ப வேண்டாம் என்று அவர் கூறியுள்ள போதிலும், முன்னுக்கு பின் முரணான அவரின் பேட்டி இந்த வழக்கின் திசையை திருப்பும் முயற்சியாக அமைந்துள்ளது. 

லாவண்யாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும். தமிழக அரசும், காவல்துறையும் நேர்மையாக, வெளிப்படைத்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும். அதனால் தான் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என் கேட்கிறோம் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.