ஆன்லைன் வகுப்பு குளறுபடிகளைத் தீர்க்காத யூ-டர்ன் கல்வி அமைச்சரும், அடிமை அரசுமே மாணவியின் தற்கொலைக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உளுந்தூர்பேட்டையில் ஆன்லைன் வகுப்புக்காக ஒரே மொபைலை பயன்படுத்துவதில் சகோதரிகளுடன் ஏற்பட்ட தகராறில் நித்யஸ்ரீ என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ‘’உளுந்தூர்பேட்டையில் ஆன்லைன் வகுப்புக்காக ஒரே மொபைலை பயன்படுத்துவதில் சகோதரிகளுடன் ஏற்பட்ட தகராறில் நித்யஸ்ரீ என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டது வேதனை அளிக்கிறது. ஆன்லைன் வகுப்பு குளறுபடிகளைத் தீர்க்காத யூ-டர்ன் கல்வி அமைச்சரும், அடிமை அரசுமே இதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

2-3 குழந்தைகளைக் கொண்ட நடுத்தர குடும்பங்கள் எப்படி பிள்ளைகளை ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செய்யும். ஆன்லைன் வகுப்பில் உள்ள ஏற்றத்தாழ்வை-குளறுபடியை போக்க வேண்டுமெனக் கடந்த ஜுலை 19 அன்றே கழக இளைஞரணி தீர்மானம் நிறைவேற்றியது. அடிமை அரசு இனியும் தூங்காமல் மாணவர்கள் உயிர்காக்க வேண்டும்’’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.