Asianet News TamilAsianet News Tamil

#BREAKING தளர்வுகள் ரத்து? கடுமையாகும் ஊரடங்கு.. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

தமிழகம் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த  டிஜிபி திரிபாதி. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 

Strict curfew .. Chief Minister Stalin urgent advice
Author
Chennai, First Published May 14, 2021, 11:58 AM IST

தமிழகம் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த  டிஜிபி திரிபாதி. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிக வேகமாக பரவி வருவதால் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, மதியம் 12.00 மணி வரை சில தளர்வுகளை அளித்துள்ளது. ஆனால், ஊரடங்கை மதிக்காமல் பொதுமக்கள் பலர் எல்லை மீறி வருகின்றனர்.

Strict curfew .. Chief Minister Stalin urgent advice

கடுமையான நடவடிக்கை எடுத்து காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால் 14 நாள் ஊரடங்கு உபயோக மில்லாமல் போய்விடும் என  ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் கூறப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற அனைத்து கட்சிகள் கூட்டத்திலும் தமிழகத்தில் ஊரடங்கை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. 

Strict curfew .. Chief Minister Stalin urgent advice

இந்நிலையில், முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் டிஜிபி திரிபாதி. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சட்டம் ஓழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆகியோர் தமிழக முதல்வருடன் ஆலோசனை ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios