எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என முதல்வர்களை தந்த அதிமுகவின் செல்லத் தொகுதி ஆண்டிப்பட்டி. இந்தத் தற்போது போட்டியிட விருப்பனு தாக்கல் செய்துள்ளார் தேனி மாவட்ட துணை செயலாரான முருக்கோடை ராமர். எதிர் முகாமான திமுக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தொயுதியில்ஆண்டிப்பட்டி தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தங்கதமிழ்செல்வன்.

அதிமுகவின் கோட்டையான ஆண்டிபட்டியில் மூன்று முறை போட்டியிட்டுள்ள (2001,11,16) தங்க தமிழ்ச்செல்வன் ஹாட்ரிக் வெற்றிபெற்று செல்வாக்குமிக்க நபராகப் பார்க்கப்படுகிறார். டான்சி வழக்கால் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட மறுக்கப்பட்டு, முதல்வராகி மீண்டும் அப்பதவி முடக்கப்பட்டது. வழக்கில் விடுதலையான பிறகு அதிமுக கோட்டையான ஆண்டிப்பட்டி 2002 இடைத்தேர்தலில் களமிறங்கி முதலமைச்சரானார். 2001ஆம் ஆண்டு வெற்றிபெற்றாலும் ஜெயலலிதாவுக்காக தங்க தமிழ்ச்செல்வன் பதவியை ராஜினாமா செய்தார். இப்படிப்பட்ட வரலாறு கொண்டது ஆண்டிப்பட்டி தொகுதி.

2019ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் திமுகவின் மகராஜா போட்டியிட்டு வெற்றிபெற்றார். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுகவின் கோட்டையை மீண்டும் தகர்த்தது திமுக. தற்போது திமுக சார்பாக அமமுகவிலிருந்து சென்றுள்ள தங்கத்தமிழ்செல்வன் அங்கு போட்டியிட தனக்கு வாய்ப்பு கேட்டு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். திமுகவுக்கு சென்றுள்ள அவர் முதல் முறையாக அந்த கட்சிக்கு சென்றபின் போட்டியிட இருக்கும் முதல் தேர்தல். இந்தத் தேர்தலில் அவர் களமிறங்கினால் பழைய செல்வாக்கோடு வெற்றிபெற முடியுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அதேவேளை, இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவை சேர்ந்த மகாராஜன் மீண்டும் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் தான் தங்க தமிழ்செல்வன் போடி நாயக்கனூர் தொகுதிக்கும் சேர்த்தே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அங்கு அதிமுக சார்பில் முன்பு போட்டியிட்ட லோகிராஜனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் அதிமுவிற்கு தோல்வி உறுதி என்கின்றனர் ஆண்டிப்பட்டி அதிமுகவினர். அங்கு முருக்கோடை ராமரும் அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவருக்கு முக்குலத்தோர் வாக்கு மட்டுமின்றி காவுடர், நாயுடு, பிள்ளை, செட்டியார் ஓட்டுமட்டுமல்ல தேவேந்திர சமூக வாக்குகளும், ஆதிதிராவிட வாக்குகளும் கிடைக்கும் என்கிறார்கள். தற்போது தேனி மாவட்ட துணை செயலாளராக இருக்கிறார் முருக்கோடை ராமர். 

தங்கதமிழ்செல்வன் போட்டியிட்டால் முருக்கோடை ராமர் அதிமுக சார்பில் டஃப் கொடுப்பார் என்கிறார்கள். ஏற்கனவே இருவருக்குமான போட்டி தேனி மாவட்டத்தில் மிகப்பிரபலம். அன்றே இவர்களின் பிரச்சனை ஜெ. வரை சென்றது குறிப்பிடத்தக்கது. அமமுகவில் இருந்து தங்கதமிழ்ச்செல்வன் விலகியபோது அதிமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளக்கூடாது என தீர்மானம் போட்டவர்தான் இந்த முருக்கோடை ராமர். ஆக இம்முறை இருவரும் எதிர்த்து போட்டியிட்டால் ஆண்டிப்பட்டி தொகுதி அனல் பறக்கும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

தனிப்பட்ட நபருக்கு என ஆண்டிப்பட்டி தொகுதியில் செல்வாக்கு கிடையாது. அது அதிமுகவின் கோட்டை. கடந்த முறை இடைத்தேர்தல் நடந்தபோது அங்கு அதிமுக- அமமுக என இரண்டாக பிரிந்து கிடந்ததால் திமுக வெற்றி பெற்றது. மற்றபடி தங்க தமிழ்செல்வன் ஹாட்ரிக் வெற்றி பெற்றார் என்பதெல்லாம் அதிமுகவுக்கான செல்வாக்கு மட்டுமே காரணம். அதிமுக சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் வெற்றி பெறுவார்கள். ஆனால், முருக்கோடை ராமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் நிச்சய வெற்றி என்பதே நிலவரம். தங்க. தமிழ்செல்வனின் உண்மையான செல்வாக்கு அப்போது தெரிந்து விடும் என்கிறார்கள் அப்பகுதியை சேர்ந்த ரத்தத்தின் ரத்தங்கள்.