காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தீக்குளித்த சரவணசுரேஷ் உயிரிழந்த செய்தி கேட்டு, தன்னுடன் பேசிய நடிகர் சிம்பு, போனிலேயே கதறி அழுததாக வைகோ கூறியுள்ளார்.காவிரி பிரச்னைக்காக இந்தத் தற்கொலை முயற்சியை அவர் மேற்கொண்டதாகக் கூறப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது ஆனால் அதை மத்திய அரசு, மாநில அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்த போராட்டத்தில் வைகோவின் மனைவி ரேணுகாதேவியின் சகோதரர் ராமானுஜத்தின் மகன் சரவணன் சுரேஷ். இவர் வைகோவுடன் இணைந்து அரசியல் ஈடுபட்டு வந்தார். இவர் நடக்கும் போராட்டங்களில் பங்கேற்று வந்துள்ளார்.இதனையடுத்து திடீரென்று நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொள்வதால் விருதுநகர் விளையாட்டு மைதானத்துக்கு சென்ற அவர் அங்கு யாரும் எதிர்பாராத வகையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.   மிகவும் மோசமான நிலையில் சிகிச்சைக்காக  மதுரை அப்போலோவில் சேர்க்கப்பட்டார்.

90 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டதால் இனி அவர் பிழைப்பது கடினமே என டாக்டர்கள் கூறிவந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தகவலை அறிந்த நடிகர் சிம்பு வைகோவை போனில் தொடர்பு பேசிய நடிகர் சிம்பு, போனிலேயே கதறி அழுததாக வைகோ கூறியுள்ளார்.