ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவை தெரிவித்து வருகின்றன.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  அங்கு நேரடியாக சென்னு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதே போன்று தூத்துக்குடி நகரைச்சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில்  கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்  பேசிய டிடிவி தினகரன், ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு விரைவில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். 

அமைச்சர்கள், அரசு குறித்து பேசியதற்காக என்மீது வழக்கு தொடர்ந்தால் ஏற்றுக்கொள்கிறேன். மக்களுக்காக செயல்படுபவர்களே வெற்றி பெற முடியும்; தமிழகத்தை சோமாலியாவாக மாற்றம் செய்யும் முயற்சி நடைபெறுகிறது என டிடிவி தினகரன். குற்றம் சாட்டினார்

சென்னை ஆர்.கே.நகரில் இரட்டை இலையை தோற்கடிக்கக் கூடிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது தனக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் டி.டி.வி.தினகரன்  குறிப்பிட்டார்.