Asianet News TamilAsianet News Tamil

சிலை கடத்தல் வழக்கை சிபிஐ தான் விசாரிக்க வேண்டும்… பொன்.மாணிக்க வேல் வேஸ்ட் !! கோர்ட்டை அதிர வைத்த தமிழக அரசு…

Statue Prevention Division is work not well under pon manikkavel
Statue Prevention Division  is work not well under pon manikkavel
Author
First Published Aug 2, 2018, 8:01 AM IST


சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு முறையாக செயல்படாததால் அது தொடர்பான அனைத்து வழக்குகளும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும், தற்போது வழக்கை நடத்தி வரும்  பொன்.மாணிக்கவேல் விசாரணையில் திருப்தி இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஏராளமான புராதன கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் சிலவற்றில், சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக யானை ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி ஆர்.மகாதேவன், இந்த வழக்குகளை எல்லாம் விசாரணை நடத்த ஐ.ஜி. பொன். மாணிக்க வேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு விரிவு விகாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

Statue Prevention Division  is work not well under pon manikkavel

பொன். மாணிக்க வேல் நடத்திய விசாரணையில், சிலை கடத்தல் சம்பவத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட பல முக்கிய நபர்களுக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது.விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகள் நேற்று  நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் அமைக்கப்பட்ட சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பாக செயல்படவில்லை என்று அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியன் தெரிவித்தார்.

Statue Prevention Division  is work not well under pon manikkavel

மேலும், நீதிமன்றத்தால் இந்த பிரிவு அமைக்கப்பட்டு ஓராண்டாகியும் இதுவரை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் அரசுக்கு ஒரு விசாரணை அறிக்கைக் கூட வழங்கவில்லை என்றும் தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியன் தெரிவித்தார்.

சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ தான் விசாரிக்கும் என்றும் அரவிந்த் பாண் டியன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், “மாநில அரசின் காவல்துறை மீது உங்களுக்கே நம்பிக்கையில்லையா” என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு வழக்குரைஞர், “காவல்துறை விசாரித்த வரை முறையாகத்தான் இருந்தது, ஆனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்ட ஓராண்டில் என்ன நடந்தது என தெரியவில்லை” என தெரிவித்தார்.

Statue Prevention Division  is work not well under pon manikkavel

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணை விபரங்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என்று பொன்.மாணிக்கவேல் தரப்பு தெரிவித்தது. இதுகுறித்து சிலைக் கடத்தல் தரப்பு வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் அரசின் கொள்கை முடிவை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவின் விசாரணை நிலைஅறிக்கையும், சிலைகளை வைப்பதற்கான ஸ்ட்ராங் ரூம்கள் அமைப்பதற்கான அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios