Asianet News TamilAsianet News Tamil

Agnipath Protest: வெளிநாட்டு சக்தியின் தவறான வழிகாட்டு.. ஆளுநர் கருத்து.. ப.சிதம்பரம் பதிலடி..

அக்னிபத் விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாக மாநில ஆளுநர் கருத்துத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல. மேலும், உள்நாட்டு சக்திகளும் வெளிநாட்டு சக்திகளும் இளைஞர்களுக்குத் தவறான வழியைக் காட்டுகிறார்கள் என்று சொல்வது அறவே ஏற்புடையதல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
 

state governor to comment in favor of the state on the Agnipath issue
Author
Tamilnádu, First Published Jun 19, 2022, 2:41 PM IST

ராணுவத்தில் புதிதாக ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக பீகார், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்கள் இளைஞர்கள் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அக்னிபத் திட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

"இந்திய ராணுவத்தில் இளைஞர் சமுதாயத்திற்கு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் தேசிய தலைமைக்கு நன்றி" என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார்.இந்நிலையில் அக்னிபாத் விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாக மாநில ஆளுனர் கருத்துத் தெரிவிப்பது ஏற்புடையதல் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: Agnipath Protest: அக்னிபத் திட்டம்.. மீண்டும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனையில் பாதுகாப்புத்துறை அமைச்சர்..

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், " அக்னிபாத்' திட்டம் ஓர் அரசியல் முடிவு. இன்று சர்சைக்குரிய அரசியல் பிரச்னையாக உருவாகிவிட்டது. இதில் அரசுக்கு ஆதரவாக மாநில ஆளுநர் கருத்துத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல. மேலும், உள்நாட்டு சக்திகளும் வெளிநாட்டு சக்திகளும் இளைஞர்களுக்குத் தவறான வழியைக் காட்டுகிறார்கள் என்று சொல்வது அறவே ஏற்புடையதல்ல. இந்தப் பிரச்னைக்கு அமைதியான போராட்டம் மூலமாகவும் விரிவான விவாதம் மூலமாகவும் தான் தீர்வு காணவேண்டும். இந்த விவாதத்தில் ஒரு மாநில ஆளுநர் பங்கேற்பதற்கு இடம் இல்லை" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
 

மேலும் படிக்க: முதல்வருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து..

Follow Us:
Download App:
  • android
  • ios