Asianet News TamilAsianet News Tamil

Agnipath Protest: அக்னிபத் திட்டம்.. மீண்டும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனையில் பாதுகாப்புத்துறை அமைச்சர்..

நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படைகளில் தலைமை தளபதிகளுடன் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
 

Agnipath - Rajnath Singh meets service chiefs for 2nd straight day
Author
Tamilnádu, First Published Jun 19, 2022, 12:09 PM IST

முப்படைகளில் தற்காலிகமாக ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இராணுவத்தில் சேருவதற்கு தயாராகி வந்த பயிற்சி மாணவர்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். கடந்த செவ்வாய்கிழமை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்த திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதன், தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளிலும் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இந்த திட்டத்தின் கீழ் புதிதாக ஆள் சேர்க்கப்படும்.

4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்த அக்னி வீரர்களில் 25% பேர் மட்டும் நிரந்தம் செய்யப்படுவர். மீதமுள்ளவர் அனைவருக்கும் கட்டாய ஓய்வு அளிக்கப்படும். மேலும் அவர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடையாது. இதனால் தங்களது எதிர்காலத்தை குறித்து கேள்வியெழுப்பு இளைஞர்கள், அக்னிபத் திட்டத்திற்கு எதிராக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: Agnipath Protest: பாதுகாப்புத்துறை வேலைகளில் அக்னி வீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு.. மத்திய அரசு அறிவிப்பு

பீகார், உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் இரயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டதில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான ரயில்வே பொது சொத்துகள் சேதபடுத்தப்பட்டுள்ளன. சில இடங்களில் போராட்டகாரர்கள் வாகனங்களை தீ வைத்து எரித்துள்ளனர். இதனிடையே இளைஞர்களின் போராட்டத்தை தணிக்க ஆளும் தரப்பு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. 

அதன்படி அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கான உச்ச வரம்பு தளர்வு, வேலைவாய்ப்பில் பாதுகாப்புத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தில் 10% இட ஒதுக்கீடு உள்ளிடவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இருந்தபோதிலும் நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் தீவிமடைந்து வருவதால், இன்று மீண்டும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது இல்லத்தில் முப்படை தளபதிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் படிக்க:Agnipath Protest: அக்னிபத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு... பீகாரில் ரெயில் சேவைகள் ரத்து...!
 

Follow Us:
Download App:
  • android
  • ios