ஜிஎஸ்டி வரி வசூலிப்பதை மாநில அரசு ஏற்று நடத்த வேண்டும் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
அனைத்துவித வரியையும் மத்திய அரசே வசூலித்து மாநிலங்களுக்கு பங்கிட்டு கொடுக்கும் முறை சரியானதாக இருக்காது என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜிடி நாயுடு கல்வி நிறுவனம் மற்றும் தொழிற் கூட வளாகத்தில் சயின்ஸ் எக்ஸ்பிரிமெண்டா அறிவியல் மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு அறிவியல் மையத்தை தொடங்கி வைத்து விழா பேருரை ஆற்றினார். அப்போது விழாவில் இந்த அறிவியல் மையம் மூலம் புதுப்புது அறிவியல் கண்டுபிடிப்புகள் கண்டுபிடிப்பதற்கு ஏதுவாகவும், ஜெர்மன் நாட்டுடன் இணைந்தும் மேற்கொள்ளப்படுவதால் சர்வதேச அளவிலும் அங்கீகாரம் கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
பள்ளி மாணவ, மாணவியர் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் என அனைவரும் இந்த அறிவியல் மையத்தை பயன்படுத்தி தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாக பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவும் இது வழிவகை செய்துள்ளது என்றார்.
இதனைத் தொடர்ந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்றைக்குள்ள உலக பொருளாதார வர்த்தக சூழ்நிலையில் கலால் உற்பத்தி திறன், புதுமையான கண்டுபிடிப்புகள், நோக்கம், விஞ்ஞான பூர்வமாக சிறப்பு வழிகள் இதுதான் ஒரு நாட்டிற்கு உலக அளவில் இருக்கின்ற பொருளாதார சக்தியாக போட்டியிடும் முன்னேற்றமாக இருக்கக்கூடியது. இச்சூழலில் ஏற்கனவே முதல்வர்கள் எல்லாம் பள்ளி மாணவர்களுக்கும், அதே போல் கல்லூரி மாணவர்களுக்கும், உங்களின் பெற்றோர்களுக்கும் தெளிவான தகவலும் சரியான அறிவுரைகளையும் யார் எந்த துறையில் செல்ல வேண்டும் எந்தெந்த வேலை வாய்ப்புகள் இருக்கின்றது என்ற நான் முதல்வர் திட்டம், உழைப்பின் முக்கியத்துவம், விடாமுயற்சியின் முக்கியத்துவம், இதையெல்லாம் தெளிவுபடுத்தி உள்ளது. அவருடைய தனிப்பட்ட கவனத்தில் சிறப்பு முயற்சியாக இது உள்ளது
அதில் இந்த ஜிடி நாயுடு நிறுவனம் ஜெர்மனியில் உள்ள இன்ஜினியரிங் தொழில்நுட்பம் மற்றும் கல்வி முறையில் சாதாரண பள்ளி கல்லூரி பயிலும் மாண மாணவர்கள் வளர்ச்சியில் முன்னேற வேண்டும்
பல்வேறு தொழில்நுட்பம் ஜெர்மனியில் உள்ளது. பொருளாதார வளர்ச்சி திறமைக்கு, கிடைக்கக்கூடிய அனைத்தும் ஜெர்மனியில் தான் கிடைக்கும். உலக அளவில் சிறந்த தயாரிப்பு அறிவியல் நிறுவனமாக விளங்கும் இடம் ஜெர்மனி தான். எந்த துறையிலும் முதன்மையாக விளங்குவது ஜெர்மன் தொழில்நுட்பம் மட்டும் தான். அதன் அடிப்படையில் கோவைக்கும், ஜெர்மனிக்கும் நெருங்கிய உறவு உண்டு. நிறைய நபர்கள் அங்கே சென்று படிக்கிறார்கள்.
இது பல ஆயிரம் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் அவருடைய திறமைகளுக்கும் அறிவிக்கும் சிறப்பான அடுத்தகட்ட முன்னேற்ற நிகழ்வுக்கு கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும் என்றார்.