தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி, தங்களது செல்போன் கடையை திறந்து வைத்து இருந்ததாக கூறி அவர்களை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றவர்கள் கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு ஊசலாடும் நிலையில் கோவில் பட்டி கிளைச்சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்கள். ஒரிரு நாளிலேயே தந்தையும் மகன் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் உலகத்தையே உலுக்கி எடுத்தது.

 மதுரை ஐகோர்ட் உத்தரவின் படி, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

சிபிசிஐடி நடவடிக்கையை தொடர்ந்து காவலர் முத்துராஜ் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது. இதையடுத்து, அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தூத்துக்குடி சிபிசிஜடி அலுவலகத்தில் காவலர் மகாராஜன் மட்டும் ஆஜரானர். அவரிடம் சிபிசிஜடி போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நீதிபதியான பாரதிதாசனை காவலர் மகாராஜன் ஒருமையிலும் மிரட்டல் தோனியிலும் நடந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மீண்டும் விருதுநகர் மாவட்டச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு கொடுக்கும் முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி .இந்நிலையில் சாத்தான்குளம் விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் தொடர்ந்து தமிழக அரசை தரம் தாழ்ந்து விமர்சிப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

"முதல்கட்ட விசாரணை, சாட்சி சேகரித்தல், ஆதாரம் திரட்டுதல் முடிந்து குற்றவாளி உறுதி செய்யப்படுகின்றனர். இந்த குற்றவியல் சட்ட நடைமுறை சாத்தான்குளம் விவகாரத்திலும் பின்பற்றப்படுகிறது.  சாத்தான்குளம் விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் அரசு, விசாரணை அமைப்புகளின் மீது பழி போட்டு  மலிவான அரசியலை செய்கிறது திமுக. போலீசாரின் நடவடிக்கைகள் மீதும், தமிழக அரசின் மீதும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை கூறுகிறார் ஸ்டாலின் என்றும் நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் உள்ள வழக்கில் அவதூறு விதைக்க கூடாது. முதலமைச்சர் எடப்பாடியின் நல்லாட்சியை நரி சூழ்ச்சிகளால் களங்கப்படுத்த முடியாது.  இவ்வாறு தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் கூறியுள்ளார்.