ஆனால் அம்மாவால் வழிநடத்தப்படும் எங்களை சிறையில் அடைத்து முடக்கி விடலாம் என்ற எண்ணத்தில் ஸ்டாலின் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார். avmdhfhd நான் ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன், வழக்குகள் போட போட தான் அதிமுக அதிக பலத்தோடு எழுச்சியோடு எழுந்துவரும், ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றார்.
வழக்குகள் போடப் போடத்தான் அதிமுக அதிக பலத்தோடு எழுச்சி பெற்று எழுந்து நிற்கும் என முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். கள்ள ஓட்டு போ சென்னதே முதல்வர்தான் என்றும், ஆனால் ஜெயக்குமார் மீது திமுக தொடுத்த வழக்கு முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்தார். புழல் சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்த சிவி சண்முகம் இவ்வாறு கூறினார்.
ஆரம்பத்திலேயே எச்சரித்த ஸ்டாலின்:
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியை கைப்பற்றியது. தேர்தல் பிரச்சாரத்தின் போதே திமுக ஆட்சிக்கு வந்ததும் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள், ஊழல் செய்ய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என ஸ்டாலின் எச்சரித்திரிந்தார். அந்த வரிசையில் அதிமுக அமைச்சர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் தொடர்ந்து திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் விமர்சித்து வந்த ஜெயக்குமார் திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாண்டடாக சிக்கிய ஜெயக்குமார்:
நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலின்போது திமுகவைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் கள்ள ஓட்டுப்போட வந்ததார் என கூறி அவரைப் பிடித்த அரை நிர்வாணப்படுத்தி, அடித்து அவமானப்படுத்திய வழக்கில் ஜெயகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆவர் மீது ஏற்கனவே இருந்த சொத்து விவகாரம் தொடர்பான புகாரிலும் அவர் கைது செய்யப்பட்டார். அதில் கடந்த 19 நாட்களுக்கும் மேலாக அவர் புழல் சிறையில் இருந்து வந்தார். இந்த கைது திமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை என ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கூறிவந்தனர். இந்நிலையில் ஜெயகுமார் மீது தொடுக்கப்பட்ட 3 வழக்கிலும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று காலை புழல் சிறையில் இருந்து விடுதலையானார். அப்போது அவருக்கு அதிமுகவினர் மேளதாளங்களுடன் வரவேற்பு கொடுத்தனர்.

ஜெயக்குமார் வீட்டில் ஓபிஎஸ்-இபிஎஸ்:
பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இதேபோல முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் ஜெயக்குமாரை அவர்கள் வீட்டில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன்பிறகு செய்தியாளர் சந்தித்த சிவி சண்முகம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு கைது செய்து ஜெயக்குமாரை சிறையில் அடைத்தது.
புகார் கொடுத்தவர் யார் என்று அனைவருக்கும் தெரியும். 3711 A+ ரவுடிகள் பட்டியலை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் A+ குற்றவாளிதான் கள்ள ஓட்டு போடும்போது பிடிபட்டார். அந்த நபரை பிடித்து கொடுத்ததற்காகத்தான் பொய் வழக்கு போட்டு போலீசார் ஜெயக்குமாரை கைது செய்தனர். இதேபோல் அவருக்கு எதிராக இருந்த சிவில் நீதிமன்றத்தில் இருந்த வழக்கை கிரிமினல் குற்ற வழக்காகப் பதிவு செய்து காவலை நீட்டித்தனர்.

ஸ்டாலினை எச்சரித்த சி.வி சண்முகம்:
ஆனால் அம்மாவால் வழிநடத்தப்படும் எங்களை சிறையில் அடைத்து முடக்கி விடலாம் என்ற எண்ணத்தில் ஸ்டாலின் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார். நான் ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன், வழக்குகள் போட போட தான் அதிமுக அதிக பலத்தோடு எழுச்சியோடு எழுந்துவரும், ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றார். போலீசார் சட்டத்தை தவறாக கையாண்டிருக்கிறார்கள் என உணர்ச்சி பொங்கக் கூறினார் அவர் கூறினார். உச்ச நீதிமன்றம் கொடுத்த வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறி அராஜகமாக கைது செய்தது கண்டிக்கத்தக்கது, கள்ள ஓட்டு போட சொன்னதே முதலமைச்சர் தான், அப்படி இருக்கும்போது அந்த நபரை எப்படி கைது செய்வார்கள்? என அவர் கேள்வி எழுப்பினார்.
