stalin visits marina with his wife
தீராத அரசியல் பணிகளுக்கு மத்தியிலும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மனைவியோடு சென்னை மெரீனா கடற்கரைக்கு ஜாலி விசிட் அடித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவு, ஓ.பி.எஸ். பதவியேற்பு, தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு, பேரவையில் நிகழ்ந்த களோபரம், எடப்பாடி முதல்வரானது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம், தேர்தல் ரத்து உள்ளிட்ட தொடர்ச்சியான நிகழ்வுகளால் தமிழக அரசியல் ஜூரம் 100 செல்சியஸை தட்டி சதம் அடித்துள்ளது.

இந்த அத்தனை அரசியல் பரபரப்புகளிலும் தன்னை பிரதானமாகச் செலுத்தி சீரிய வேகத்தில் தடதடத்தும் அரசியல்வாதிகளில் முதன்மையானவராகத் திகழ்ந்து வருகிறார் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின்.
சட்டமன்றத் பொதுத் தேர்தலுக்காக அன்று தொடங்கிய நமக்கு நாமே முதல் இன்றைய களநிலவரம் வரை படு ஆக்டிவாக சுழன்றடிக்கும் சூறாவளியாகவும், ஓய்வறியாச் சூரியனாகவும் தன்னை கட்டமைத்துள்ளவர் மு.க.ஸ்டாலின்.

இத்தனை களபோரங்களுக்கு மத்தியிலும் தனது குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடுவதையும் ஸ்டாலின் என்றுமே தவிர்த்தது இல்லை. இதன் ஒருபகுதியாக நேற்று மாலை தனது மனைவி துர்காவுடன், ஸ்டாலின் சென்னை மெரீனா கடற்கரைக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார்.

துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் வரும் ஸ்டாலின் மி்க எளிமையாக தனது மனைவியுடன் கடற்கரை மணலில் நடந்து சென்ற காட்சி அங்கிருந்த பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
