மாநில தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பழனிசாமி உள்ளார். ஆணைய செயலராக ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.பழனிசாமி செயல்பட்டு வந்தார். பேரூராட்சி இயக்குனர் பதவியையும் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று  அவர் பேரூராட்சிகள் இயக்குனராக நியமிக்கப்பட்டார். 

ஆணைய செயலராக விழுப்புரம் கலெக்டர் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார். செயலர் மாற்றம் பற்றிய தகவல் வெளியானதும் ஸ்டாலின் 'டுவிட்டர்' பக்கத்தில் கண்டன அறிக்கை பதிவிடப்பட்டது.

அதில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியை திடீரென மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது. 

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் பணிகளை செய்தவரை மாற்றியது ஏன்? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விசுவாசமாக பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாரா? 

இந்த ஏற்பாடு உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடவா அல்லது உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வினர் ஒட்டுமொத்தமாக தில்லுமுல்லுகளில் ஈடுபடவா? இவ்வாறு அதில் பதிவிடப்பட்டது.

செயலரை ஆணையர் என பதிவிட்டது குழப்பத்தை ஏற்படுத்தியது. சிறிது நேரம் கழித்து அந்தப் பதிவுகள் அகற்றப்பட்டு ஆணையருக்கு பதிலாக செயலர் என திருத்தம் செய்யப்பட்ட பதிவு பதிவேற்றம் செய்யப்பட்டது.

பொதுக் கூட்டங்களில் பேசும்போது தான் திமுக தலைவர் உளறி வருகிறார் என்றால் டீவிடடரிலுமா அவரை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.