தமிழக அரசியலில் வாரிசு அரசியலுக்கு பெயர் போன கட்சி என்றால் மக்களுக்கு முதலில் நினைவிற்கு வருவது திமுக தான். திமுகவில் முக்கியப்பதவியில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் கருணாநிதியின் உறவினர்களாக தான் இருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க கலைஞருக்கு பிறகு ஸ்டாலின் தான் திமுக தலைவர் என்பதும் கூட முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒன்று தான். 

என்னதான கலைஞரின் மகன் என்றாலும், அவருக்கு இந்த பதவி ஒன்றும் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. ஆரம்பம் முதலே கட்சியில் ஒரு தொண்டனாக அறிமுகமாகி படிப்படியாக உயர்ந்து தான் இன்று இந்த தலைவர் பதவியை எட்டி இருக்கிறார் ஸ்டாலின். அதிலும் கட்சி தலைவராக பொறுப்பேற்ற பிறகு அனல் பறக்க செயல்பட்டு வருகிறார் ஸ்டாலின். 

குட்கா விவகாரத்தை சிபிஐ விசாரணை வரை கொண்டு சென்றது, என அவர் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் அனைத்துமே எதிர்கட்சிக்கு பெரும் தலைவலியை கொடுப்பதாக தான் அமைந்திருக்கிறது. அந்த வகையில் தான் சேலத்தில் நடந்த கூட்டமும் அமைந்திருக்கிறது. சேலத்தில்  ஸ்டாலின்  அனல்பறக்க கேள்விகளால் எதிர்கட்சியை துளைத்து எடுத்து கொண்டிருந்த தருணத்தில்  ஆர்.கே.நகரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி கலந்து கொண்டு பேசி இருக்கிறார்.


அதுவும் ஸ்டாலினைப்போலவே பேச்சில் பட்டையை கிளப்பி இருக்கிறார். அரசியலில் கலைஞருக்கு அடுத்தபடியாக தலைமைப்பதவிக்கு தன்னை வளர்த்து கொண்ட ஸ்டாலின் தான் , இப்போது தன் மகனை அந்த பதவிக்கு வளர்த்துவிட முயன்று கொண்டிருக்கிறார் என்பதை இந்த ஆர்ப்பாட்டத்தின் போது  உதயநிதி பேசிய விதம் உறுதி செய்திருக்கிறது.

எப்படி தனக்கான மேடை பேச்சை ஸ்டாலின் தயாரிப்பாரோ,  அதேபோல உதயநிதி ஆர்.கே.நகரில்  பேசுவதற்காகவும் பக்காவாக மேடை பேச்சை தயாரித்து கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். என்ன பேச வேண்டும்  எப்படி பேச வேண்டும் என உதயநிதி  பேச வேண்டிய விஷயத்தில் பல திருத்தங்களைச் செய்து கொடுத்திருக்கும் ஸ்டாலின் ‘இது கண்டன ஆர்ப்பாட்டம் தான்... அதனால இவ்வளவு பேசினால்  போதும். அதிகம் பேசினாலும் யாரும் ரசிக்க மாட்டாங்க... மேடையில் பேசும் போது அதுக்குனு தனி தோற்றம் இருக்கனும் ஜீன்ஸும், டி-ஷர்ட்டு-னு போகக்கூடாது. என ஸ்கூல் ஸ்டூடண்டுக்கு சொல்வது போல ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லி கொடுத்திருக்கிறாராம் மேலும் கூட்டத்தில் மேடை ஏறி பேசும் போது பேண்ட் சட்டை போட்டிருந்தாலும் , கண்டிப்பாக கட்சி  துண்டு போட்டிருக்கனும் அதுதான் மக்கள் மத்தியில் நல்ல இமேஜை உருவாக்கும் என்றும் அறிவுரைகளை அள்ளி வழங்கி இருக்கிறார் ஸ்டாலின் . 

உதயநிதியும் அப்பா பேச்சை மதித்து  மேடைக்குப் போகும்வரை சாதாரணமாக இருந்துவிட்டு , மேலே ஏறியதும் துண்டைக் கேட்டு வாங்கிப் போட்டுக்கொண்டு தனது அரசியல் வாழ்க்கையை இன்னும் மெருகேற்ற தொடங்கி இருக்கிறார். திமுகவில் ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி தான் என்றாலும் , தானாக வளர்ந்த தலைவனுக்கும் , தந்தையால உருவாக்கப்படும் தலைவனுக்கும் என்ன வித்யாசம் இருக்கும் என்பது இனிவரும் காலங்களில் தான் தெரியும்.