பீட்டா அமைப்புக்கு எதிராக போராட்டம் நடந்துவரும் சூழ்நிலையில் அந்த அமைப்பு கலைக்கப்படவேண்டும் அல்லது அதில் தமிழர்களை இணைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வினோத கோரிக்கை ஒன்றை வைத்து செய்தியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக அமெரிக்க சார்பு நிறுவனமான பீட்டா வழக்கு தொடர்ந்து தடை வாங்கியது. அதற்கு பின்னர் மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. கடந்த மூன்றாண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா நிறுவனம் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. பீட்டா நிறுவனத்தின் விளம்பர தூதுவராக இருந்த திரிஷா கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பீட்டா அமைப்பின் சீஇஒ விலங்குகள் நல வாரியத்தில் சட்டவிரோதமாக இருக்கிறார்.

விலங்குகள் நல வாரியம் பீட்டாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அதை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆயரக்கணக்கான இளைஞர்கள் அலங்காநல்லூரில் நேற்று கூடினர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
அவர்கள் நடத்திய போராட்டம் 22 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. பல கட்சித்தலைவர்களும் இதை கண்டித்தனர். இன்று டிஜ்பி அலுவலகத்தில் இதுபற்றி புகாரளிக்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் புகாரளித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் பீட்டா அமைப்பு தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஸ்டாலின் பீட்டாவின் செயல்பாடு , தமிழர்களின் உணர்வை , தமிழர்களின் கலாச்சாரத்தை ஒரு மோசமான சூழ்நிலைக்கு கொண்டுச்செல்லாக்கூடிய நிலையை உருவாக்கியுள்ளது. உடனடியாக அது கலைக்கப்பட வேண்டும், அல்லது தமிழர்களை அந்த அமைப்பில் உறுப்பினர்களை சேர்க்கும் வாய்ப்பையாவது ஏற்படுத்தி தர வேண்டும் என்று நான் ஏற்கனவே அறிக்கை விடுத்துள்ளேன் என்றார்.

பீட்டாவுக்கு கேட்டால் விலங்குகள் நல வாரியத்தை நினைத்து கொண்டு பதில் சொல்கிறாரே, அந்த அமைப்பை தடை த்தானே செய்ய முடியும் , அதில் தமிழர்களை இணைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என்று சொல்கிறாரே என்று செய்தியாளர்கள் குழம்பி போயினர்.
கூட இருக்கும் தலைவர்களாவது சொல்லியிருக்கலாமே என்று தங்களுக்குள் கேட்டுகொண்டனர். மு.க.ஸ்டாலினின் இந்த பேட்டி எடிட் செய்யப்படாமல் தொடர்ந்து அவர்கள் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானதுதான் வேடிக்கை.
ஏற்கனவே தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்த்ததை காவிரி நடுவர் மன்றம் என்று பேசினார். பெரிய தலைவர்களின் சிறிய வார்த்தைகள் கூட கவனிக்கப்படும். அதிலும் பீட்டா போன்ற அமைப்பை விட்டு வெளியேற திரிஷா போன்றவர்களுக்கு கோரிக்கை வைத்து வரும் நேரத்தில் தமிழர்களை அந்த அமைப்பில் இணைக்க வாய்ப்பு ஏற்படுத்திதர வேண்டும் என்று பேட்டி அளிப்பது நகைப்புக்குரியது.
